காதலனுடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கண்டி  போகம்பர குளத்தில் பாய்ந்து தற்கொலை செய்ய முயற்சித்த பெண்ணொருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

இன்று பகல் கண்டி குயின்ஸ் உணவகத்திற்கு அருகில் உள்ள குளத்தில் குறித்த பெண் குதித்துள்ளார். உயிருக்கு போராடிய நிலையில் காப்பாற்றப்பட்ட பெண் தற்போது கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார்.

காவற்துறையினர் மற்றும் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் குறித்த பெண் காப்பாற்றப்பட்டுள்ளார்.

25 வயதுடைய இப்பெண் பதுளை பஸ்ஸர பிரதேசத்தை சேர்ந்தவர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.