பல்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் கைது

05 Feb, 2025 | 04:51 PM
image

(செ.சுபதர்ஷனி)

பல்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கல்கிஸ்ஸை பகுதியில் வைத்து பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த மாதம் 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார். 

இதன்போது சந்தேக நபரிடமிருந்து 15 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்  படோவிட்ட பகுதியைச் சேர்ந்த 37 வயதானவராவார்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்  கடந்த மாதம் 31 ஆம் திகதி கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்ட போது, 7 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொலிஸார் விசாரணைகளில்,  சந்தேக நபர்  2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி தெகிவளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடனும், 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி கல்கிஸ்ஸை  பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடனும், கடந்த ஜனவரி மாதம் 07 ஆம் திகதி கல்கிஸ்ஸை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடனும் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் போது பிரதான சந்தேக நபர்கள் பயணித்த  மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் எனவும் பொலிஸ் விசாரணைகளில்  தெரியவந்துள்ளன.

மேலும், வெளிநாடுகளிலுள்ள பாதாள உலக கும்பலைச்  சேர்ந்தவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் ஆலோசனைக்கமைய சந்தேக நபர் இந்த குற்றச் செயல்களை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுகாதாரத்துறை சார் ஊழியர்களுக்கான பணியிடமாற்றத்துக்கு நிறைவுகாண்...

2025-02-07 20:16:30
news-image

ஒரு சில தமிழ், முஸ்லிம் தலைவர்கள்...

2025-02-07 20:22:35
news-image

இன்றைய வானிலை

2025-02-08 06:05:17
news-image

புளியங்குளத்தில் மின்சாரம் தாக்கி 6 வயது...

2025-02-08 02:19:36
news-image

வவுனியாவில் முச்சக்கர வண்டியின் மேலதிக பாகங்களுக்கு...

2025-02-08 01:58:23
news-image

மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க...

2025-02-07 20:28:48
news-image

தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் நிர்வாகத்தினருக்கும், வடக்கு...

2025-02-08 02:10:13
news-image

மலையக மக்களை 'மலையகத் தமிழர்கள்" என...

2025-02-07 20:05:32
news-image

மலையக மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை...

2025-02-07 21:18:41
news-image

கொவிட் தொற்றில் உயிரிழந்தவர்களை தகனம் செய்யும்...

2025-02-07 14:49:21
news-image

மின்சார சபையின் பொறியியலாளர் சங்கமே பிரதான...

2025-02-07 14:15:46
news-image

மலையகத்தில் கல்வி, வீடமைப்பு , வீதி...

2025-02-07 20:25:59