சுனந்த தேசப்பிரிய
-----------------
லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பான விசாரணைகளை சிதைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லசந்தவை கொலை செய்தவர்கள் அரச ஆயுதாரிகளே என பல வட்டாரங்கள் தெரிவிக்கின்றனஇஇன்று வரை அரசாங்க சார்பு சக்திகள் அவர்களிற்கு ஆதரவை வழங்கி வருவதுடன் விசாரணைகளை குழப்ப முயன்றுவருகின்றன.
15 வருடங்களிற்கு முன்னர் இடம்பெற்ற லசந்தவிக்கிரமதுங்க படுகொலையுடன் இராணுவத்தின் திரிபோலி படையணிக்கு தொடர்புள்ளதாக பரவலாக நம்பப்படுகின்றது.
ஆரம்பத்திலிருந்து இந்த படுகொலைகள் குறித்த விசாரணைகளை குழப்புவதற்கு ராஜபக்ச அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.
லசந்த விக்கிரமதுங்க சுட்டுக்கொல்லப்பட்டார் என நீதித்துறை அதிகாரியொருவர் போலியான பொய்யான முடிவிற்கு வந்திருந்தார்.
எனினும் பின்னர் லசந்தவிக்கிரமதுங்க கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பது நிரூபிக்கப்பட்டது.
ஊடகங்கள் இந்த விவகாரத்தை திசைதிருப்புவதற்காக வேறுவேறு கதைகளையும் வெளியிட்டன.
லசந்தவை பின்தொடர்ந்தவர்கள் பயன்படுத்திய வாகனங்களின் இலக்கங்கள் மூலம் அவர்கள் திரிபோலி பிரிவை சேர்ந்தவர்கள் என்பது பின்னர் தெரியவந்தது.
படுகொலை இடம்பெற்ற தினத்தன்று குறிப்பிட்ட தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்தி உரையாடிய இராணுவவீரர்கள் குறித்த விபரங்களை இராணுவம் இன்றுவரை வழங்கவில்லை.
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது ஆட்சிக்காலத்தில் லசந்த விக்கிரமதுங்க படுகொலையாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என உறுதியளித்திருந்தது.
விசாரணை செய்யப்படவேண்டிய குற்றங்களின் பட்டியலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தீர்மானித்தவேளை லசந்த விக்கிரமதுங்க படுகொலையே முதலாவதாக காணப்பட்டது.
லசந்த கொலை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தற்போதைய ஜனாதிபதி மீண்டும் மீண்டும் உறுதிமொழி வழங்கியிருந்தார்.
எனினும் தற்போது என்ன நடைபெறப்போகின்றது என்றால் லசந்த விக்கிரமதுங்க படுகொலை குறித்த ஆதாரங்களை மறைத்துவிட்டு மூன்று சந்தேக நபர்களை விடுதலை செய்யப்போகின்றனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ஜனவரி 27ம் திகதி கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ள சட்டமா அதிபர் பரிந்து ரணசிங்கஇலசந்த விக்கிரமதுங்க படுகொலை சந்தேகநபர்களான பிரதிப்பொலிஸ்மா அதிபர் பிரசன்ன நாணயக்கார பணி நீக்கம் செய்யப்;பட்ட பொலிஸ் பரிசோதகர் திஸ்ஸ சுகந்தபாலஇ இராணுவபுலனாய்வு பிரிவின் சார்ஜன்ட் மேஜர் உதலாகம ஆகியோரை விடுவிக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஆனந்த உதலகம - இராணுவபுலனாய்வு பிரிவின் சார்ஜன்ட் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்ட பின்னர் தன்னை கடத்தியவர் இவர் என லசந்தவின் வாகனச்சாரதி அடையாளம் காட்டியிருந்தார்.
2016 ஜூலைமாதம் 7ம் திகதி கல்கிசை மேலதிக நீதவான் லோச்சன வீரசிங்க முன்னிலையில் இடம்பெற்ற அணிவகுப்பில் லசந்தவின் சாரதி இவரை அடையாளம் காட்டினார்.
லசந்தவிக்கிரமதுங்கவின் கொலையில் கோட்டாபய ராஜபக்சவிற்கு தொடர்புள்ளது என தெரிவித்த லசந்தவின் வாகனச்சாரதியை கடத்தி மௌனமாகயிருக்கவேண்டும் என எச்சரித்துள்ளார்.
இல்லாவிட்டால் லசந்தவிற்கும் நடந்ததே அவருக்கும் நடக்கும் என எச்சரித்திருந்தனர்.
பொலிஸ் பரிசோதகர் திஸ்ஸசுகந்தபால -
கல்கிசை பொலிஸின் குற்றதடுப்பு பிரிவின் தலைமை பொலிஸ் அதிகாரி- லசந்த விக்கிரமதுங்க தனது குறிப்பேட்டில் தனது வாகனத்தை மோட்டார் சைக்கிளில் இவர் பின்தொடர்ந்தார் என குறிப்பிட்டிருந்தார்.
கொலைகாரர்களை அடையாளம் காண்பதற்கு இது ஒரு முக்கியமான ஆதாரமாக காணப்பட்டது.
சட்டமா அதிபர் விடுதலை செய்யுமாறு பரிந்துரைத்துள்ள பிரதிபொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார திசாரி சுகபாலவிடமிருந்து லசந்த விக்கிரமதுங்கவின் குறிப்பேட்டை பெற்று அதனை அழித்தவர் .
லசந்த விக்கிரமதுங்கவிற்கு நடந்தது உனக்கும் நடக்கவேண்டுமா என பிரசன்ன நாணயக்கார மிரட்டியிருந்தார்.
மோட்டார் சைக்கிள் விபரங்களை பதிவு செய்து அதனை மறைத்து வைத்திருந்தார் - அதனை பின்னர் சிஐடியினர் கண்டுபிடித்தனர்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் மீண்டும் சிஐடியினர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ள இந்த தருணத்தில் சட்டமா அதிபரிடமிருந்து இவ்வாறான அறிவித்தல் வெளியாகியுள்ளமை குறித்து பொலிஸ்திணைக்களம் அதிர்ச்சியடைந்துள்ளனது.
இந்த உத்தரவை சட்டமாஅதிபர் திணைக்களத்தின் பிரதிசொலிசிட்டர் ஜனத்த பண்டார பிறப்பித்துள்ளார் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இவருக்கு ஆதரவாக உள்ளவர் கோட்டாபய ராஜபக்சவின் சட்டத்தரணி
2021ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் திகதி அவ்வேளை சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஸ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றிய ஜனத்த பெரேரா 11 இளைஞர்கள் படுகொலை தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரணாகொடவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விலக்கிக்கொள்ளப்படுவதாக அறிவித்திருந்தார்.
இவரே இந்த வழக்கை நீண்டகாலமாக கையாண்டுவந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM