(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைப்பதற்கு எனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட தயாசிறி ஜயசேகரவும், பிமல் ரத்நாயக்கவும் முரண்பட்டுக் கொண்டார்கள். எனது பிரச்சினை பற்றி பேசப்படவில்லை. நான் எங்கு சென்று பேசுவது என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சபையில் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டு ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தின் போது ஒழுங்கு பிரச்சனையை முன்வைத்து மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
எனது சிறப்புரிமை மீறல் பிரச்சினை பற்றி பேசுவதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட தயாசிறி ஜயசேகரவும், பிமல் ரத்நாயக்கவும் முரண்பட்டுக் கொண்டார்கள். எனது சிறப்புரிமை மீறல் பற்றி பேசப்பிடவில்லை.
சிறப்புரிமை மீறலுக்காக எனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் ஆளும் தரப்பு உறுப்பினரும், எதிர்தரப்பின் உறுப்பினரும் முரண்பட்டுக் கொண்டார்கள். எனது பிரச்சினை பற்றி பேசப்படவில்லை. நான் எங்கு சென்று பேசுவது. எனது உரிமை தொடர்ந்து மறுக்கப்படுகிறது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM