(நெவில் அன்தனி)
சகலவிதமான ரி20 கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற சாதனையை ஆப்கானிஸ்தானின் சுழல்பந்துவீச்சு நட்சத்திரம் ராஷித் கான் நிலைநாட்டியுள்ளார்.
தென் ஆபிரிக்காவில் தற்போது நடைபெற்றுவரும் SA20 கிரிக்கெட் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் கேப் டவுன் அணிக்காக விளையாடிவரும் ராஷித் கான், பார்ல் றோயல்ஸ் அணி வீரர் துனித் வெல்லாலகே கேயை ஆட்டம் இழக்கச் செய்ததன் மூலம் 632ஆவது ரி20 விக்கெட்டைக் கைப்பற்றி புதிய சாதனை நிலைநாட்டினார்.
MI கேப் டவுன் அணியின் தலைவரான ராஷித் கான் அப் போட்டியில் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். அத்துடன் இதுவரை 461 ரி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள ராஷித் கான் 633 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.
இதன் மூலம் மேற்கிந்தியத் தீவுகளின் ட்வேன் ப்ராவோவுக்கு இதுவரை சொந்தமாக இருந்த 632 ரி20 விக்கெட்கள் என்ற சாதனை ராஷித் கானினால் முறியடிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு மகத்தான சாதனை எனவும் இதனையிட்டு பெரு மகிழ்ச்சி அடைவதாகவும் ராஷித் கான் தெரிவித்துள்ளார்.
பத்து வருடங்களுக்கு முன்னர் யாராவது ரி20 பந்துவீச்சில் சாதனை படைப்பீர்களா என என்னிடம் கேட்டிருந்தால், நான் அப்படி நினைக்கவில்லை என்றுதான் கூறியிருப்பேன் என்றார் ராஷித் கான்.
'நீங்கள் பத்து வருடங்களுக்கு முன்னர் நான் சாதனை நிலைநாட்டுவேனா என கெட்டிருந்தால், நான் அப்படி நினைக்கவில்லை என்றுதான் பதிலளித்திருப்பேன். ஆப்கானிஸ்தானியனாக இந்த சாதனையை நிலைநாட்டியது பெருமை தருகிறது. ரி20 பந்துவீச்சாளர்களில் ட்வேன் ப்ராவோ மிகச் சிறந்த பந்துவீச்சாளர் ஆவார். அவரது சாதனையை முறியடித்தது பெருமை தருகிறது. எனது சாதனைகளை தொடர்வேன்' என ராஷித் கான் மேலும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM