நாளொன்றுக்கு 4,000 கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

Published By: Digital Desk 3

05 Feb, 2025 | 01:57 PM
image

(எம்.மனோசித்ரா)

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தை 24 மணித்தியாலங்களும் இயங்கச் செய்து, நாளொன்று 4,000 கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மேலதிகப் பணியாளர்களாக ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்களை அரச சேவைகள் ஆணைக்குழுவின் உடன்பாட்டுடன் ஒப்பந்த அடிப்படையில் கடமையில் ஈடுபடுத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடவுச்சீட்டுப் பற்றாக்குறையை தவிர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள புத்திஜீவிகள் குழுவின் விதந்துரைக்கமைய 1,100,000 'பி' வகைக் கடவுச்சீட்டுக்களை சமகால விநியோகத்தர்களுக்கு வழங்குவதற்கான பெறுகை செயன்முறை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, தற்போதுள்ள கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்தை நீக்குவதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்து 24 மணித்தியாலயங்கள் மேற்கொள்வதன் மூலம் நாளொன்றுக்கு 4000 கடவுச்சீட்டுக்கள் வீதம் வெளியிடுவதற்கான வேலைத்திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்குத் தேவையான மேலதிக பணிக்குழாமினரை குறித்த திணைக்களத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்களை அரச சேவைகள் ஆணைக்குழுவின் உடன்பாட்டுடன் ஒப்பந்த அடிப்படையில் கடமையில் ஈடுபடுத்துவதன் மூலமும் மற்றும் தற்போது அரச சேவையில் ஈடுபடுகின்ற ஊழியர்களை பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சிடம் கேட்டறிந்து இணைப்புச் செய்வதன் மூலமும் ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நீதிமன்றின்...

2025-02-16 14:05:16
news-image

வரவு செலவுத் திட்ட இறுதி வரைவு...

2025-02-16 13:22:29
news-image

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டம்...

2025-02-16 12:59:41
news-image

பஹளவெம்புவ பகுதியில் மோட்டார் சைக்கிள் -...

2025-02-16 12:57:40
news-image

நெல்லின் உத்தரவாத விலையால் விவசாயிகள் நன்மையே...

2025-02-16 12:55:32
news-image

தமிழர் தாயகத்தின் அடையாளங்களை சிதைப்பது தடுக்கப்பட...

2025-02-16 13:54:14
news-image

பண்டாரகமவில் கார் விபத்து ; இளைஞர்...

2025-02-16 13:00:13
news-image

தெரணியகல பகுதியில் கோடாவுடன் சந்தேகநபரொருவர் கைது...

2025-02-16 12:28:20
news-image

செம்மணியில் எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிக்கு...

2025-02-16 12:26:57
news-image

நாட்டில் 16 இலட்சம் அங்கவீனர்கள் காணப்படுகின்றனர்...

2025-02-16 12:26:15
news-image

நாளை தேசிய மக்கள் சக்தியின் வரவு...

2025-02-16 11:43:58
news-image

பொத்துப்பிட்டிய பகுதியில் பொல்லால் தாக்கி ஒருவர்...

2025-02-16 12:25:19