2024ஆம் ஆண்டில் 87 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த ஆண்டில் இதுவரை 13 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தரப் பரிசோதனையில் தோல்வியடைந்த மருந்துகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது.
2024ஆம் ஆண்டில் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்த மருந்துகளில் 47 மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டவை எனவும் 12 மருந்துகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை எனவும் ஏனைய மருந்துகள் சீனா, கென்யா, பாகிஸ்தான், ஜப்பான், பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்றும் கூறப்படுகிறது.
தரச் சோதனையில் தோல்வியடைந்ததாக இந்த மருந்துகளில் சில திரும்பப் பெறப்பட்டுள்ளன. சில மருந்துகள் விநியோகிக்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
2023ஆம் ஆண்டில் தரம் குறைந்த மருந்துகளின் பாவனையால் பல உயிரிழப்புகள் பதிவாகியிருந்ததோடு, இது தொடர்பில் 124 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM