இரு வேறு பகுதிகளின் கொள்ளைச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொள்ளையிடப்பட்ட பொருட்களும் சம்மாந்துறை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மலையடிக்கிராமம் 01 பகுதியில் கடந்த பெப்ரவரி 03 ம் திகதி வீடு உடைக்கப்பட்டு தொலைபேசி உட்பட பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக உரிமையாளர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டிற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கமைய பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழு புலனாய்வு மற்றும் தேடுதல் மேற்கொண்ட போது இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைதான வீரமுனை மற்றும் மலையடிக் கிராமம் பகுதிகளை சேர்ந்த இரு சந்தேக நபர்கள் வசமிருந்த இரண்டு தொலைபேசிகளை பொலிஸார் கைப்பற்றினர்.
அத்துடன் கடந்த ஜனவரி 26ம் திகதி மையவாடி பகுதியில் வயதான பெண்மணியின் வீட்டில் உள்நுழைந்து நகை மற்றும் கையடக்க தொலைபேசிகளை கொள்ளையிட்ட சம்பவத்துடன் கைதான சந்தேக நபர்கள் தொடர்புள்ளமை பொலிஸாரின் மேலதிக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்ட வயதான பெண்ணும் நேற்று செவ்வாய்க்கிழமை (04) சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் தனது வீட்டில் கடந்த ஜனவரி 26ம் திகதி இரவு வேளையில் நகை மற்றும் கையடக்க தொலைபேசிகள் திருடிச் செல்லப்பட்டிருந்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து மேற்குறித்த 2 சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் போது மற்றுமொரு சந்தேக நபரான பாண்டிருப்பு 02 பகுதியைச் சேர்ந்தவர் கைதானார்.
அத்துடன் சந்தேக நபர்கள் வசம் கொள்ளையடித்த நகைகளையும் மீட்ட சம்மாந்துறை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM