சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த படுகொலை : சட்டமா அதிபரின் கடிதம் தண்டனை விலக்களிப்பை சட்டபூர்வமாக்குவதற்கான கேவலமான முயற்சி - சுதந்திர ஊடக இயக்கம்

05 Feb, 2025 | 12:27 PM
image

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான ஏனைய குற்றச் செயல்களுக்கு நீதி கோரி சுதந்திர ஊடக இயக்கமும் ஏனைய ஊடக நிறுவனங்களும் கறுப்பு ஜனவரியை அனுஷ்டிக்கும் தருணத்தில், லசந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் விடுதலை செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டும் சட்ட மாஅதிபர் பரிந்த ரணசிங்க கையொப்பமிட்ட கடிதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சுதந்திர ஊடக இயக்கம் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் இந்த கொடூரமான குற்றங்களுக்கு எதிராக சட்டம் மற்றும் நீதியை அமுல்படுத்துவது அடிப்படை விடயமாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

லசந்தவின் படுகொலையை நினைவுகூரும் சுதந்திர ஊடக இயக்கத்துடன் கடந்த ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இந்தக் குற்றங்களுக்கு நீதி வழங்கப்படும் என உறுதியளித்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பரிந்த ரணசிங்க நியமிக்கப்பட்டார் என்று கூறி தம்மைக் காப்பாற்றிக்கொள்ளும் உரிமை ஒரு பொறுப்பான அரசாங்கத்துக்கு இருக்க முடியாது.

இலங்கையில் குற்றவாளிகளுக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கும் சட்ட அமுலாக்கம் இல்லாவிட்டாலும் இவ்வாறான நடவடிக்கைகள் அதற்கான சட்டப் பின்னணியை வழங்குகின்றன என்பது எமது அவதானிப்பு.

எனவே ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவும் அவரது அரசாங்கமும் உடனடியாக தலையிட்டு இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இல்லையேல், நீதியை கோரும் அனைத்து தரப்பினரும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரே முன்னணியில் இணைவதை தடுக்க முடியாது என்பதையும், மக்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்குவதில் எதிர்பார்க்கப்படும் நேர்மையை பிரதிபலிக்க அரசாங்கமும் ஜனாதிபதியும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் நினைவூட்டுவோம் என தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துபாயில் ஒளிந்துகொண்டு இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில்...

2025-11-07 03:19:52
news-image

யாழில் சட்டவிரோதமாக நிதி சேகரிக்க வந்த...

2025-11-07 02:53:26
news-image

வடமாகாண சுதேசமருத்துவத் திணைக்கள அலுவலகம் மாங்குளத்தில்...

2025-11-07 02:51:14
news-image

இந்த ஆண்டு இதுவரை 2210 வீதி...

2025-11-07 02:35:23
news-image

யாழில் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது!

2025-11-07 01:58:41
news-image

யாழில் கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளுடன்...

2025-11-07 01:55:53
news-image

விசேட மூலோபாய உறவுக்கு முக்கியத்துவமளிப்பதே இலங்கையின்...

2025-11-06 15:10:08
news-image

இந்து சமுத்திரத்தின் அமைதியைப் பாதுகாப்பதற்கு இலங்கை...

2025-11-06 12:15:26
news-image

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்தியாவின்...

2025-11-06 22:17:21
news-image

கண்டி அருப்போலாவில் அமெரிக்கப் பெண் மரணம்...

2025-11-06 22:14:04
news-image

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவின் வகிபாகம்...

2025-11-06 15:40:08
news-image

2035க்குள் தொழுநோயை முழுமையாக ஒழிக்க அரசாங்கம்...

2025-11-06 21:16:38