சம்பத் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரே இடத்திலேயே அனைத்து நிதி மற்றும் காப்புறுதி தீர்வுகளை வழங்குவதற்காக, இலங்கையின் முதற்தர Bancassurance சேவை வழங்குனரான யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்துடன் மூலோபாய கூட்டாண்மையொன்றை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கூட்டாண்மையினூடாக, சம்பத் வங்கியின் விரிவான தீர்வுகள் வரிசையுடன், யூனியன் அஷ்யூரன்ஸ் வழங்கும் பிரத்தியேக ஆயுள் காப்புறுதித் தீர்வுகளின் விரிவான வரிசை, தங்குதடையின்றி ஒன்றிணைக்கப்பட்டு, வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு அவர்களுடைய வங்கிச்சேவை மற்றும் ஆயுள் காப்புறுதி தேவைகள் என இரண்டிற்கும் அனைத்தும் உள்ளடங்கிய சௌகரியமான தீர்வுகளை அவர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
சம்பத் வங்கி கொண்டுள்ள விசாலமான கிளை வலையமைப்பின் அனுகூலத்துடன், யூனியன் அஷ்யூரன்ஸின் தீர்வுகளை வாடிக்கையாளர்கள் இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடிவதுடன், அவர்களுக்கு உத்தரவாதம் கொண்ட நிதிப் பாதுகாப்பினை வழங்குவது மாத்திரமன்றி, வங்கியின் வாடிக்கையாளர்களின் நீண்ட கால நலனுக்கும் உதவுகின்றது.
சம்பத் வங்கி மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் சுமார் நான்கு தசாப்தங்களாக இலங்கை மக்களின் வாழ்வுடன் பின்னிப் பிணைந்துள்ளதுடன், பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது நிதி இலக்குகளை அடையப்பெறுவதற்கு அவர்களுக்கு வலுவூட்டி வருகின்றன.
இலங்கையின் பல்வகைப்பட்ட நிதிச் சேவைகள் துறையின் ஆழமான அனுபவத்தையும், புரிந்துணர்வையும் கொண்டுள்ள இந்நிறுவனங்கள், இந்த கூட்டாண்மையினூடாக ஒப்பற்ற நிபுணத்துவத்தையும், நுண்ணறிவையும் வெளிக்கொண்டு வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM