தந்தையும் மகனும் ஒருவரை ஒருவர் கத்தியால் குத்தி படுகாயம் ; அம்பலாந்தோட்டையில் சம்பவம்

05 Feb, 2025 | 11:32 AM
image

அம்பலாந்தோட்டை, ருஹுனு ரிதியகம பிரதேசத்தில் தந்தையும் மகனும் ஒருவரை ஒருவர் கத்தியால் குத்திக் கொண்டு படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (04) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

சம்பவத்தன்று, மகன் போதைப்பொருள் வாங்குவதற்குத் தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக வீட்டில் இருந்த தொலைகாட்சி பெட்டியை விற்பனை செய்ய முயன்றுள்ளார்.

இதன்போது, வீட்டில் இருந்த தாய், தனது மகனை கடுமையாகத் திட்டியுள்ளார். இதனால்  கோபமடைந்த மகன் தனது தாயை கத்தியால் குத்த முயன்றுள்ளார்.

இதனை அவதானித்த தந்தை, தாயை காப்பாற்ற முயன்ற போது மகனின் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார். 

பின்னர், படுகாயமடைந்த தந்தையும் தனது மகனை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து, காயமடைந்த இருவரும் அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுகாதாரத்துறை சார் ஊழியர்களுக்கான பணியிடமாற்றத்துக்கு நிறைவுகாண்...

2025-02-07 20:16:30
news-image

ஒரு சில தமிழ், முஸ்லிம் தலைவர்கள்...

2025-02-07 20:22:35
news-image

இன்றைய வானிலை

2025-02-08 06:05:17
news-image

புளியங்குளத்தில் மின்சாரம் தாக்கி 6 வயது...

2025-02-08 02:19:36
news-image

வவுனியாவில் முச்சக்கர வண்டியின் மேலதிக பாகங்களுக்கு...

2025-02-08 01:58:23
news-image

மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க...

2025-02-07 20:28:48
news-image

தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் நிர்வாகத்தினருக்கும், வடக்கு...

2025-02-08 02:10:13
news-image

மலையக மக்களை 'மலையகத் தமிழர்கள்" என...

2025-02-07 20:05:32
news-image

மலையக மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை...

2025-02-07 21:18:41
news-image

கொவிட் தொற்றில் உயிரிழந்தவர்களை தகனம் செய்யும்...

2025-02-07 14:49:21
news-image

மின்சார சபையின் பொறியியலாளர் சங்கமே பிரதான...

2025-02-07 14:15:46
news-image

மலையகத்தில் கல்வி, வீடமைப்பு , வீதி...

2025-02-07 20:25:59