காசா மக்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ள சவுதிஅரேபியா பாலஸ்தீன தேசமொன்று உருவாக்கப்படாவிட்டால் இஸ்ரேலுடன் உறவினை ஏற்படுத்த முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளது.
பாலஸ்தீனியர்களிற்கு என ஒரு தேசம் என்ற தனது நீண்டகால நிலைப்பாட்டை புதன்கிழமை சவுதி அரேபியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
காசாவை அமெரிக்கா கையகப்படுத்த விரும்புகின்றது என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ள பின்னர் சவுதி அரேபியாவின்வெளிவிவகார அமைச்சு இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தனது முன்னைய நிலைப்பாட்டை மீள வலியுறுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவின் நிலைப்பாடு உறுதியானதாகவும் தளர்ச்சியற்றதாகவும் காணப்படுவதாக தெரிவித்துள்ள அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சு சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர்- பிரதமர் செப்டம்பர் 18ம் திகதி 2024 சூரா கவுன்சிலின் முதலாவது அமர்வில் ஆற்றிய உரையில் தனது இந்த நிலைப்பாட்டினை தெளிவாக வெளியிட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளது.
2024 இல் ரியாத்தில் இடம்பெற்ற அராபிய- இஸ்லாமிய உச்சிமாநாட்டில் அவர் இதனை வலியுறுத்தினார்,1967ம் ஆண்டின் எல்லைகளை அடிப்படையாக கொண்ட பாலஸ்தீன தேசத்தின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்,பாலஸ்தீன பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதை நிறுத்தவேண்டும் என கோரினார் என சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM