இலங்கை மகாவலி அதிகாரசபைக்கு சொந்தமான காணிகளை அரசியல்வாதிகளுக்கும் அவர்களது நண்பர்களுக்கும் பகிர்ந்தளிக்கும் செயற்திட்டங்களைத் இல்லாமலாக்கி, விவசாயிகளின் நலனுக்காக சில வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் விவசாயத்தை துரிதமாக முன்னேயேற்றக்கூடிய ஒரு நிறுவனமாக என இலங்கை மகாவலி அதிகார சபையை குறிப்பிடலாம் எனவும் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 40% மகாவலிக்கு சொந்தமானது எனவும், அதில் ஆயிரக்கணக்கான ஹெக்டேயர் நிலப்பரப்பில் மீன்டும் விவசாயத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மகாவலி மறுமலர்ச்சி வாரத்தை முன்னிட்டு குண்டசாலை, திகன, விக்டோரியா மற்றும் கொத்மலை' ஈ 'வலயங்களில் வதிவிட வர்த்தக முகாமையாளர் அலுவலகம் திங்கட்கிழமை (3) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்ட பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச். எம். ஜே. கே. ஹேரத் கருத்துரைக்கும்பொழுது தெரிவித்ததாவது;
பத்து மகாவலி வலயங்களை மையப்படுத்தி மூன்று கட்டங்களின் கீழ் தூய்மையான இலங்கை வேலைத்திட்டத்தின் அடிப்படையில் கிராமிய வறுமையை ஒழிப்பதற்கான வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்படும் என்றார்.
அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பிரதேசத்திற்கு பிரதேசம் வேறுபடுவதாகவும், அவை துரித அபிவிருத்தி வேலைத்திட்டங்களாக இருந்தாலும், அவை நிகழ்ச்சிகள் அல்லது திருவிழாக்களுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை என்றும்
மற்றும் விக்டோரியா மற்றும் கொத்மலை E வலயத்திற்குப் பொறுப்பான வதிவிட வர்த்தக முகாமையாளர் குமார ஹேரத், அந்த வலயங்களில் நடத்தப்படும் தொடர் நிகழ்ச்சித் திட்டங்களை விளக்கியதுடன், இலக்குகளை எவ்வாறு அடைவது என்பது குறித்த திட்டத்தை பிரதி அமைச்சர் மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகியோர்களிடம் கையளித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM