'பார்க்கிங்' பட இயக்குநருடன் கரம் கோர்த்திருக்கும் சிலம்பரசன்

Published By: Vishnu

05 Feb, 2025 | 02:34 AM
image

தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் தனது பிறந்த நாளை முன்னிட்டு , அவரின் நடிப்பில் உருவாகும் மூன்று படங்களின் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு, அவருடைய ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார்.

கடந்த ஆண்டு வெளியாகி அனைவரது கவனத்தை கவர்ந்ததுடன் சிறந்த திரைக்கததைக்கான முன்னுதாரண படைப்பு என்ற அங்கீகாரத்தை ஆஸ்கார் விருது குழுவினரிடம் பெற்று, அந்த விருதுக்கான பிரத்யேக நூலகத்தில் இடம் பிடித்த 'பார்க்கிங்' எனும் தமிழ் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் 'எஸ் டி ஆர் 49' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் சிலம்பரசன் பொறியியல் பட்டப்படிப்பை படிக்கும் மாணவனாக - கதையின் நாயகனாக நடிக்கிறார்.

இந்தத் திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். படத்தில் பணியாற்றும் ஏனைய தொழில்நுட்ப கலைஞர்கள் நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக பிறகு அறிவிக்கப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சிலம்பரசன்- ராம்குமார் பாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்திருப்பதால் சர்வதேச தரத்திலான படைப்பை எதிர்பார்க்கலாம் என திரையுலகினர் தெரிவிக்கிறார்கள். இதற்கு சிலம்பரசனின் ஒத்துழைப்பும், பங்களிப்பும் முழுமையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right