துல்கர் சல்மான் நடிக்கும் 'காந்தா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published By: Vishnu

05 Feb, 2025 | 02:31 AM
image

கடந்த ஆண்டில் 'லக்கி பாஸ்கர்' என்ற படத்தின் பிரம்மாண்டமான வசூல் வெற்றிக்குப் பிறகு பான் இந்திய நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கும் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு 'காந்தா' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'காந்தா' திரைப்படத்தில் துல்கர் சல்மான் கதையை வழி நடத்திச் செல்லும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். டானி சான்செஸ் - லோபஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜானு சந்தர் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்பிரிட் மீடியா மற்றும் வேஃபாரர் ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ராணா டகுபதி- துல்கர் சல்மான்- பிரசாந்த் பொட்லூரி - ஜோம் வர்கீஸ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது தொழில் நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தை படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் ஆகியவற்றின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். 

துல்கர் சல்மான் - ராணா டகுபதி இணைந்திருப்பதால் இந்த திரைப்படத்திற்கு பான் இந்திய அளவிலான கவன ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும் பர்ஸ்ட் லுக்கில் துல்கர் சல்மான் கருப்பு வெள்ளை வண்ண பின்னணியில் புகைபிடிப்பது போல் வடிவமைக்கப்பட்டிருப்பதால் பீரியட் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right