திறமை மிக்க இந்திய நட்சத்திர நடிகர்களில் முன்னணியில் உள்ள நடிகர் ஆர். மாதவன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'டெஸ்ட்' எனும் திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் சசி காந்த் இயக்கத்தில் உருவாகி வரும் 'டெஸ்ட் ' எனும் திரைப்படத்தில் ஆர். மாதவன், சித்தார்த் ,நயன்தாரா ,மீரா ஜாஸ்மின், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விராஜ் சிங் கோஹில் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பின்னணி பாடகியான சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைத்திருக்கிறார். துடுப்பாட்டத்தை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை வை நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். சசி காந்த் தயாரித்திருக்கிறார்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்த இந்த திரைப்படம் படமாளிகையில் வெளியாகாமல் நேரடியாக ' நெட்ப்ளிக்ஸ்' எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருப்பதுடன், இப்படத்தின் கிளர்வோட்டமும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் மாதவன் ,நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் தொடர்பான காட்சிகள் உணர்வு பூர்வமாகவும் அறிவு பூர்வமாகவும் இருப்பதால் துடுப்பாட்டத்தை ரசிக்கும் மக்களிடத்தில் இந்த திரைப்படத்தை பற்றி பெரும் அதிர்வை உண்டாக்கி இருக்கிறது.
மாதவன் -நயன்தாரா- சித்தார்த் கூட்டணி அமைத்திருப்பதால், இந்த திரைப்படத்திற்கு தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM