நியூ­ஸி­லாந்து அணிக்கு அதிர்ஷ்டம் இல்­லை­யென்­றுதான் சொல்ல வேண்டும். காரணம் மழை குறுக்­கிட்­டதால் வெற்­றி­பெற வேண்­டிய போட்­டியை பறி­கொ­டுத்த சோகத்தில் ஆழ்ந்­துள்­ளது நியூ­ஸி­லாந்து. ஆனால் மறு­மு­னையில் ஆட்­டம் கைவி­டப்­பட்­டதால் அவுஸ்­தி­ரே­லிய வீரர்கள் மகிழ்ச்­சி­ய­டைந்­துள்­ளனர்.

இங்­கி­லாந்தில் எட்­டா­வது ஐ.சி.சி. சம்­பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடர் நடை­பெற்­று வ­ரு­கி­றது. நேற்று பர்­மிங்­ஹோமில் நடை­பெற்ற இரண்டாவது லீக் போட்­டியில் நியூ­ஸி­லாந்து மற்றும் அவுஸ்­தி­ரே­லிய அணிகள் மோதின.

இந்தப் போட்­டியில் நாணயச் சுழற்­சியில் வெற்­றி­பெற்ற நியூ­ஸி­லாந்து அணித் தலைவர் வில்­லி­யம்சன் துடுப்­பாட்­ட­த்தை தேர்வு செய்தார்.

நியூ­ஸி­லாந்து அணிக்கு குப்தில் மற்றும் ரான்கி ஜோடி சுமா­ரான ஆரம்­பத்தை கொடுத்­தது. ஹசில்வுட் வேகத்தில் குப்தில் 26 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார். 

நியூ­ஸி­லாந்து அணி 9.3 ஓவர்­களில் ஒரு விக்­கெட்டை இழந்து 67 ஓட்­டங்­களை எடுத்­தி­ருந்­த­போது மழை குறுக்­கிட்­டது. ஒன்­றரை மணி நேரத்­திற்குப் பின் மீண்டும் ஆரம்­ப­மான போட்டி தலா 46 ஓவர்கள் என குறைக்­கப்­பட்டு ஆடப்­பட்­டது. 

அதைத் தொடர்ந்து இணைந்த ரோஸ்­டெய்லர் மற்றும் வில்­லி­யம்சன் ஜோடி எதி­ரணி பந்­து­வீச்சை சிறப்­பாக எதிர்­கொண்­டது. 3 விக்­கெட்­டுக்கு 99 ஓட்­டங்­களை சேர்த்­த­போது, ரோஸ் டெய்லர் 46 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார். அபார ஆட்­டத்தை தொடர்ந்த வில்­லி­யம்சன் ஒருநாள் அரங்­களில் தனது ஒன்­ப­தா­வது சதத்தை விளா­சினார்.

இதன் பின் ஹசில்வுட் வேகத்தில் மிரட்ட, நியூ­ஸி­லாந்து அணியின் துடுப்­பாட்ட வீரர்கள் அடுத்­த­டுத்து விக்­கெட்டுகளை பறி­கொ­டுத்­தனர். ஹசில்வுட் வீசிய 45ஆவது ஓவரின் மூன்­றா­வது மற்றும் நான்­கா­வது பந்­து­களில் மில்னே (11), சான்ட்னர் (8) ஆட்­ட­மி­ழந்­தனர். அடுத்த பந்தை பெளல்ட் தடுத்­தாட 'ஹெட்ரிக்' விக்கெட் பெறும் வாய்ப்பு நழு­வி­யது. கடைசி பந்தில் இவரும் ஓட்­ட­மேதும் பெறாத நிலையில் ஆட்­ட­மி­ழக்க நியூ­ஸி­லாந்து அணி 45 ஓவர்­களில் 291 ஓட்­டங்­க­ளுக்கு சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்­தது. அவுஸ்­தி­ரே­லியா சார்பில் அதி­க­பட்­ச­மாக ஹசில்வுட் 6 விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தினார்.

அவுஸ்­தி­ரே­லியா துடுப்­பெ­டுத்­தாட வரும்­போது மீண்டும் மழை குறுக்­கிட்­டது. இதனால் அவுஸ்­தி­ரே­லிய அணிக்கு 'டக்வோர்த் லூயிஸ்' முறைப்­படி 33 ஓவர்­களில் 235 ஓட்­டங்கள் என வெற்றி இலக்கு மாற்­றப்­பட்­டது. 

இந்­நி­லையில் கள­மி­றங்­கிய அவுஸ்­தி­ரே­லிய அணி­யி­னரை நியூ­ஸி­லாந்து வேகப்­பந்து வீச்­சா­ளர்கள் ஆரம்­பத்­தி­லேயே கட்­டுப்­ப­டுத்­தி­விட்­டனர். பௌல்டின் பந்தில் டேவிட் வோர்னர் 18 ஓட்­டங்­க­ளுடன் வெளி­யே­றினார். மின்னேவின் பந்­து­வீச்சில் பின்ச் 8 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார். ஹென்­ரிக்ஸும் 18 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார். 

இதனால் அவுஸ்­தி­ரே­லிய அணி 9 ஓவர்­களில் 53 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்­கெட்­டுக்­களை எடுத்து திண­றிக்­கொண்­டி­ருந்த வேளையில் மீண்டும் மழை பெய்­தது. இதனால் போட்டி கைவி­டப்­ப­டு­வ­தாக அறி­விக்­கப்­பட இரு அணி­க­ளுக்கும் தலா ஒரு புள்ளி வீதம் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டது. ஆரம்­பத்­தி­லேயே மூன்று விக்­கெட்­டுக்­களை பறி­கொ­டுத்த அவுஸ்­தி­ரே­லிய அணி நிம்­மதி பெரு­மூச்­சு­விட்­டது.

நேற்­றைய போட்­டியில் அவுஸ்­தி­ரே­லி­யாவின் ஹசில்வுட் 9 ஓவர்கள் பந்­து­வீசி 52 ஓட்­டங்­களை விட்­டுக்­கொ­டுத்து 6 விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தினார். இதன் மூலம் சம்­பியன்ஸ் கிண்ண வர­லாற்றில் சிறந்த பந்­து­வீச்சை பதி­வு­செய்த இரண்­டா­வது பந்­து­வீச்­சாளர் என்ற பெரு­மையை பெற்றார். முத­லி­டத்தில் இலங்கை அணியின் பர்வேஸ் மஹ்ருப் உள்ளார். இவர் 14 ஓட்­டங்­களை விட்டுக் கொடுத்து 6 விக்­கெட்­டுக்­களை வீழ்த்தியுள்ளார். 

அத்தோடு அவுஸ்திரேலி யாவுக்கு எதிராக தனது முதல் ஒருநாள் சதத்தை விளாசினார் வில்லியம்சன். அதேபோல் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் அரங்கில் தனது அதி பட்ச ஓட்ட எண்ணிக்கையை யும் (291) பதிவுசெய்தது நியூஸிலாந்து. இதற்குமுன் 186 ஓட்டங்கள் எடுத்ததே அதிகமான ஓட்ட எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.