இலங்கைக்கான ருவாண்டா குடியரசின் உயர் ஸ்தானிகர் பிரதமருடன் சந்திப்பு

Published By: Vishnu

04 Feb, 2025 | 06:54 PM
image

இந்தியாவின் புதுடில்லியில் உள்ள ருவாண்டா உயர் ஸ்தானிகராலயத்தில் கடமையாற்றும் இலங்கைக்கான ருவாண்டா குடியரசின் உயர் ஸ்தானிகர் திருமதி ஜாக்குலின் முகங்கிரா பெப்ரவரி 03ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களை சந்தித்தார்.

இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் முக்கிய துறைகளில் பரஸ்பர நலன்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையுடன் வலுவான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை தொடர்ச்சியாக பேணுவதற்கு ருவாண்டா எதிர்பார்ப்பதாக உயர் ஸ்தானிகர் இதன் போது வலியுறுத்தினார்.

இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், முதலீடு மற்றும் அறிவுப் பரிமாற்றத்தை விரிவுபடுத்த இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிவிவகார அமைச்சின் ஆபிரிக்க விவகார பிரிவின் பணிப்பாளர் நாயகம் வருண வில்பத ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அவசர மின் தடை தொடர்பிலும் மதிப்பாய்வு...

2025-02-10 14:17:12
news-image

இன, மத சகவாழ்வுக்கு பாதிப்பு ஏற்படும்...

2025-02-10 17:47:02
news-image

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தொடர்ந்து மீண்டும்...

2025-02-10 17:40:48
news-image

நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தின் மின்னுற்பத்தி...

2025-02-10 14:19:45
news-image

பிரச்சினைகளுக்கு அரசாங்கத்துக்கு பதிலாக குரங்குகள் தான்...

2025-02-10 17:42:24
news-image

43 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இழப்பீடு...

2025-02-10 17:39:30
news-image

வலுவான உணவுப் பாதுகாப்புக் கொள்கைக்  கட்டமைப்பிற்கு...

2025-02-10 21:57:49
news-image

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி!

2025-02-10 20:57:38
news-image

நிறுவனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டை மேம்படுத்த அரச தனியார்...

2025-02-10 17:47:33
news-image

8 வாரங்களாக நிலைமை குறித்து அறிந்திருந்தும்...

2025-02-10 17:44:05
news-image

தனது இயலாமையை மறைத்துக் கொள்ள உயிரினங்களை...

2025-02-10 17:48:14
news-image

யு.எஸ்.எ.ஐ.டி நிறுவனத்தில் இருந்து நிதி பெற்றுக்...

2025-02-10 17:41:18