சிரேஷ்ட பேராசிரியர் அசங்க திலகரத்னவுக்கு பாராட்டு விழா - பிரதமர் பங்கேற்பு   

04 Feb, 2025 | 09:02 PM
image

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புகழ்பெற்ற பௌத்த அறிஞராக மதிப்பைப் பெற்றுள்ள மியன்மாரின் 'மகாசத்தம்மஜோதிக கொடி' கௌரவ நாமத்திலும், பாரதத்தின் ஆனந்த குமாரசுவாமி உயர் அங்கத்துவத்துடன் விருதுக்குரிய சேவை மனப்பான்மை மிக்க சிரேஷ்ட பேராசிரியர் அசங்க திலகரத்னவை வரவேற்கும் வகையிலான பாராட்டு விழாவொன்று இலங்கை ராமான்ய மகா நிகாயவின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய மகுலேவே ஸ்ரீ விமல தேரரின் ஆசீர்வாதத்தில் பெப்வரி 02ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கருத்து வெளியிட்டார், 

'அசங்க திலகரத்ன அவர்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச மாநாடுகள் பலவற்றில் கலந்துகொண்டுள்ளதுடன், தலைமைத்துவம் வழங்கி தனது அறிவுசார்ந்த திறமைகளை தொழிற்துறை சார்ந்த சக ஊழியர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். இலங்கையின் நாமத்தை சர்வதேச பௌத்த நிறுவன தளத்தில் பதிவு செய்யக் கிடைத்தமை பேராசிரியர் அசங்க திலகரத்னவினால் மேற்கொள்ளப்பட்ட விசேட பணியாகும். பல்வேறு தலைப்புகளின் கீழ் எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான கல்வியல் கடிதங்கள் உட்பட அரச விருதுக்கு பாத்திரமான பல கல்வியல் நூல்களிற்காக எமது விசேட பாராட்டுக்கள். 

2017ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் வெசாக் பண்டிகை தின கொண்டாட்டத்திற்கென பாரிய பணிகளை நிறைவேற்றிய பேராசிரியர் அசங்க திலகரத்ன, பேராசிரியர் ஒலிவர் அபேநாயக்கவுடன் இணைந்து 2600 years of Sambuddhatva : global journey of Awakening  என்ற பெயரில் மிகவும் மதிப்புக்குரிய நூலை வெளியிட்டார். இது உலகம் முழுவதும் பரவியுள்ள பௌத்த மதத்தின் வரலாறு மற்றும் சமகாலத்தில் 34 நாடுகளை உள்ளடக்கும் வகையில் தேசிய மற்றும் வெளிநாடுகளின் புத்திஜீவிகளின் 38 கட்டுரைகள் உள்ளடக்கிய வண்ணம்  தொகுக்கப்பட்ட மிக முக்கியமான நூலாகும். 

பல்கலைக்கழகத்தின் தொழில்சார் ஊழியராக பேராசிரியர் திலகரத்ன, நீண்ட காலமாக காணப்பட்ட பல்கலைக்கழக பேராசிரியர்களின் தொழிற்துறை உரிமைகள் தொடர்பிலான பிரச்சினைகளின் போது தீவிர பங்களிப்பை வழங்கியிருந்தார். 

பௌத்த மத ஆய்வு பாடத்தை தொழிற்துறை ஆய்வு பாடமாக தொடரும் தேவையை சர்வதேச தளத்திற்கு பொருந்தும் வகையில் புலனாய்வு மற்றும் பகுப்பாய்வு ரீதியாக விடயங்களை முன்வைப்பதற்கு அவர் கூடுதல் ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தார். அண்மைக்காலத்தில் பௌத்த மத ஆய்வு பாடத்தை முன்னுரிமையாகக் கொண்டு  மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பாட கட்டமைப்பின் ஊடாக உருவான இலங்கையின் புத்திஜீவியாக அவர் பார்க்கப்படுவதுடன் அவரின் கல்வியல் வாழ்க்கைக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.' 

இந்த நிகழ்வில் வணக்கத்திற்குரிய திருகோணமலை ஆனந்த தேரர், முதுகலைப் பட்டதாரியான வணக்கத்திற்குரிய கொஸ்வத்தே ஆரிய விமல தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் இங்கு வீற்றிருந்தனர். 

குறித்த நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santhosh Jha), மியன்மார் தூதுவர் Marlar Than Htalk, பௌத்த மத, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்டோரும், பேராசிரியர் அசங்க திலகரத்னவின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட விருந்தினர்களும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கேரளா கஞ்சாவினை கட்டிலின் கீழ் பதுக்கியவர்...

2025-02-11 00:40:52
news-image

அவசர மின் தடை தொடர்பிலும் மதிப்பாய்வு...

2025-02-10 14:17:12
news-image

இன, மத சகவாழ்வுக்கு பாதிப்பு ஏற்படும்...

2025-02-10 17:47:02
news-image

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தொடர்ந்து மீண்டும்...

2025-02-10 17:40:48
news-image

நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தின் மின்னுற்பத்தி...

2025-02-10 14:19:45
news-image

பிரச்சினைகளுக்கு அரசாங்கத்துக்கு பதிலாக குரங்குகள் தான்...

2025-02-10 17:42:24
news-image

43 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இழப்பீடு...

2025-02-10 17:39:30
news-image

வலுவான உணவுப் பாதுகாப்புக் கொள்கைக்  கட்டமைப்பிற்கு...

2025-02-10 21:57:49
news-image

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி!

2025-02-10 20:57:38
news-image

நிறுவனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டை மேம்படுத்த அரச தனியார்...

2025-02-10 17:47:33
news-image

8 வாரங்களாக நிலைமை குறித்து அறிந்திருந்தும்...

2025-02-10 17:44:05
news-image

தனது இயலாமையை மறைத்துக் கொள்ள உயிரினங்களை...

2025-02-10 17:48:14