முறைப்பாடுகள் தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை - பதில் பொலிஸ் மா அதிபர்

Published By: Digital Desk 7

04 Feb, 2025 | 09:03 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை பதிவு செய்யாமல் அது தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அறிவித்துள்ளார்.

அத்துடன் பொலிஸ் கட்டளைச் சட்டத்துக்கு அமைய அத்தகைய அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள விசேட சுற்றறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

முறைப்பாடளிப்பதற்காக பொலிஸ் நிலையங்களுக்கு வருகை தரும் தரப்பினரின் முறைப்பாடுகள் உரிய முறையில் 

பதிவு செய்யப்படாமல் வெவ்வேறு காரணங்களை முன்வைத்து அவை நிராகரிக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட தரப்பினர்

 தமக்கு முறைப்பாடளிப்பதாக தெரிவித்துள்ள பதில் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் நிலையங்களில் முன்வைக்கப்படும் முறைப்பாடுகளை பதிவு செய்து அவற்றை விசாரணை செய்வது பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமை மற்றும் பொறுப்பு என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பொலிஸ் நிலையங்களில் அளிக்கப்படும் எந்தவொரு முறைப்பாட்டையும் பதிவு செய்யாமல் நிராகரிப்பதற்கு  பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது எனத்தெரிவித்துள்ள அவர், இனி வரும் காலங்களில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கமைய செயற்படாத உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பதில் பதில் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியாவில் குளவி கொட்டியதில் 9 பேர்...

2025-02-11 01:49:49
news-image

வவுனியாவில் மீண்டும் மாணவன் மீது கூரிய...

2025-02-11 01:46:42
news-image

கேரளா கஞ்சாவினை கட்டிலின் கீழ் பதுக்கியவர்...

2025-02-11 00:40:52
news-image

அவசர மின் தடை தொடர்பிலும் மதிப்பாய்வு...

2025-02-10 14:17:12
news-image

இன, மத சகவாழ்வுக்கு பாதிப்பு ஏற்படும்...

2025-02-10 17:47:02
news-image

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தொடர்ந்து மீண்டும்...

2025-02-10 17:40:48
news-image

நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தின் மின்னுற்பத்தி...

2025-02-10 14:19:45
news-image

பிரச்சினைகளுக்கு அரசாங்கத்துக்கு பதிலாக குரங்குகள் தான்...

2025-02-10 17:42:24
news-image

43 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இழப்பீடு...

2025-02-10 17:39:30
news-image

வலுவான உணவுப் பாதுகாப்புக் கொள்கைக்  கட்டமைப்பிற்கு...

2025-02-10 21:57:49
news-image

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி!

2025-02-10 20:57:38
news-image

நிறுவனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டை மேம்படுத்த அரச தனியார்...

2025-02-10 17:47:33