இலங்கையின் 77வது சுதந்திர தினம் இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தருணத்தில் சென்னையில் உள்ள இலங்கை உயர் துணை ஸ்தானீகராலயத்தில் சுதந்திர தின கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
காலை 9:00 மணி அளவில் தொடங்கிய சுதந்திர தின விழா நிகழ்வில் இந்தியாவிற்கான இலங்கை துணை உயர் ஸ்தானீகர் (பதில்) சுபுன் திஸேபிரேம கொடியேற்றினார்.
இதனைத் தொடர்ந்து நாட்டிற்காக இன்னுயிர் நீத்த வீரர்களுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிங்கள பௌத்த துறவி மற்றும் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத்தை சார்ந்த ஆன்மீக பெரியோர்கள் சுதந்திர தின விழா உரை நிகழ்த்தி, அங்கு வருகை தந்திருந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதனை அடுத்து இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் சுதந்திர தின வாழ்த்து செய்தியை துணை உயர் ஸ்தானீகராலய அதிகாரிகள் வாசித்தனர்.
அதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள உயர் துணை ஸ்தானீகர் (பதில்) உயர்திரு. சுபுன் தேஸபிரேம சென்னையில் உள்ள துணை ஸ்தானீகராலயத்தின் பணிகளைப் பற்றியும் சேவைகளைப் பற்றியும் விவரித்தார்.இறுதியில் விழாவிற்கு வருகை தந்திருந்த சிறப்பு அதிதிகளுக்கும், பொது மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM