(எம்.எப்.எம். பஸீர்)

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  காலி வீதியில் ஓரிடத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த விபசார விடுதியொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் அதன் முகாமையாளர் உள்ளிட்ட ஐந்து பெண்களை கைதுச் செய்துள்ளனர். இச் சம்பவம் நேற்று  இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

விபசார விடுதியொன்றை முகாமை செய்தமை தொடர்பில் 38 வயதுடைய பெண் ஒருவரையும் விபசாரத்தில் ஈடுபட்டமை தொடர்பில் 38,20,21,40 வயதுகளை உடைய பெண்களை கைதுச் செய்ததகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 விபசார விடுதியை ஹங்வெல்லையைச் சேர்ந்த பெண் ஒருவரே நடத்திச் சென்றுள்ளதாகவும் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் புளத் சிங்கள, வவுனியா, கொழும்பு  மற்றும் பாதுக்கை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.