கொழும்பு புனித பெனடிக்ட் கல்லூரி 160 ஆண்டுகால விசேடத்துவத்தை பெருமையுடன் கொண்டாடுகிறது. மானுடம் மற்றும் கிறிஸ்தவ கல்வியில் அது கொண்டுள்ள பாரம்பரியத்தை அது மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
160 ஆண்டுகால இருப்பைக் கொண்ட ஒரு வளமான வரலாற்றை பெருமைப்படுத்தும் மிக சில பாடசாலைகளில் இதுவும் ஒன்று என்பதால் இது ஒரு தனித்துவமான சாதனையாகும்.
இந்த நீண்ட வரலாற்றுக் காலப் பகுதியில் மதம், கல்வி, பெருநிறுவன உலகம், பொழுதுபோக்கு, இராணுவம், அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புனித பெனடிக்ட் கல்லூரி முக்கிய பல பிரமுகர்களை உருவாக்கியுள்ளது.
இந்த மைல்கல் நிகழ்வானது கடந்த ஜனவரி 03ஆம் திகதி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றதுடன், இந்நிகழ்வில் கல்லூரியின் பணிப்பாளர், பிரதிப் பணிப்பாளர்கள், ஊழியர்கள், முன்னாள் மாணவர்கள், இந்நாள் மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட 3,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் ஆரம்ப உரையை அருட்சகோதரர் கலாநிதி புபுது ராஜபக்ஷ நிகழ்த்தியதைத் தொடர்ந்து, கல்லூரியின் மரபின் அடித்தளத்தை உருவாக்கும் ஆழமான ஆன்மீக விழுமியங்களை பிரதிபலிக்கும் அருட்தந்தை டெரல் கூஞ்சே தலைமையிலான நற்கருணை வழிபாடு நடைபெற்றது.
இந்த மாலை நிகழ்வின் சிறப்பம்சமாக வருட பூர்த்தி இலச்சினை மற்றும் வருங்காலத்துக்கான புனித பெனடிக்ட் கல்லூரியின் தொலைநோக்குப் பார்வையும் வெளியிடப்பட்டது.
"160 and Beyond," (160 மற்றும் அதற்கு அப்பால்) எனும் கருப்பொருளின் கீழான கொண்டாட்டங்களைக் குறிக்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இந்த இலச்சினையானது, ஒரு கொண்டாட்ட வாணவேடிக்கையின்போது பார்வையாளர்களின் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
இந்த இலச்சினையானது 21ஆம் நூற்றாண்டின் கற்றல் சூழலில் அதன் பாரம்பரியத்தை மதிக்கும் அதேவேளையில் மாற்றம் மற்றும் புத்தாக்கத்துக்கான கல்லூரியின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.
160ஆவது ஆண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்களில் ஒன்றாக ஜனவரி 17ஆம் திகதி கல்லூரியின் புரட்சிகரமான STEM கல்வித் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த முன்னோடியான முயற்சி, புத்தாக்கமான மற்றும் முன்னோக்கிச் சிந்திக்கும் நபர்களின் புதிய தலைமுறையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வேகமாக வளர்ந்துவரும் உலகில் வெற்றிக்குத் தேவையான திறன்களுடன் அவர்களை சித்தப்படுத்துவதையும், எதிர்கால சவால்களை எதிர்கொள்ள அவர்களுக்கு உதவுவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
160ஆவது வழிகாட்டல் குழுவின் தலைவர் கிரேஷியன் பெனாண்டோவின் "dream big" (பெரிதாக கனவு காண வேண்டும்) எனும் வழிகாட்டலுடன், 160ஆவது வருட நிறைவைக் குறிக்கும் வகையில் 2025ஆம் ஆண்டுக்கான ஒரு அற்புதமான நிகழ்வுகளின் வரிசையை குழு வகுத்திருந்தது.
இந்த நிகழ்வுகள் புனித பெனடிக்ட் கல்லூரியின் முன்னாள் மாணவர் சமூகத்தை, கல்லூரியின் வளமான பாரம்பரியத்தின் கொண்டாட்டத்தில் ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்நிகழ்வுகளின் நாட்காட்டியின் சிறப்பம்சங்களில் இரண்டு நாள் கற்றல் விழா, கல்லூரியிலிருந்து வளர்க்கப்பட்ட திறமையாளர்களை வெளிப்படுத்தும் இசை நிகழ்ச்சி, நினைவு நடைபயணம், வாகன அணிவகுப்பு மற்றும் திருவிழா ஆகியன உள்ளடங்குகின்றன.
1865ஆம் ஆண்டு நிறுவப்பட்ட புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு மறைமாவட்டத்தில் உள்ள மிகப் பழமையான கத்தோலிக்க பாடசாலை என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
லசாலியன் பிரதர்ஸினால் (F.S.C.) நிர்வகிக்கப்படும் இந்த நிறுவகம், தலைமுறை தலைமுறையாக கல்விச் சிறப்பம்சம் மற்றும் மதிப்பு சார்ந்த கல்வியின் கலங்கரை விளக்கமாக திகழ்ந்து வருகின்றது.
"160 மற்றும் அதற்கு அப்பால்" எனும் தொலைநோக்குப் பார்வையின் கீழ், புனித பெனடிக்ட் கல்லூரி எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கும் நிலையில், புத்தாக்கங்களைத் தழுவி, தலைமைத்துவத்தை வளர்த்து, எதிர்வரும் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும் சிறந்த உணர்வை வளர்ப்பதன் மூலம் அதன் புகழ்மிக்க மரபைத் தொடர்ச்சியாக கட்டியெழுப்பும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM