கேரளா கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த இளைஞனை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் திங்கட்கிழமை (3) இரவு அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலியார் வீதி பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர் 26 வயது மதிக்கத்தக்க சந்தேக நபராவார்.
மேற்படி பகுதியில் அண்மைக்காலமாக கேரளா கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் சந்தேக நபரிடம் இருந்து 1 மில்லி கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் மற்றும் சான்றுப் பொருட்கள் யாவும் செவ்வாய்க்கிழமை (4) கல்முனை நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக ஆஜர்படுத்த கல்முனை தலைமையக பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அத்துடன் குறித்த சோதனை நடவடிக்கையானது கல்முனை பிராந்தியத்திற்கான உதவி பொலிஸ் அத்தியட்ச௧ர் உதுமாலெவ்வை மஹ்மூத்கான் இப்னு அசாரின் வழிகாட்டலுக்கமைய கல்முனை தலைமைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரம்சீன் பக்கீர் ஆலோசனைக்கமைய பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM