ஒரு கோடி 92 இலட்சம் ரூபா பண மோசடி : போலி வெளிநாட்டு முகவர் நிலைய உரிமையாளர் கைது

03 Feb, 2025 | 08:21 PM
image

மட்டக்களப்பில் ரூமேனியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வேலை பெற்றுத் தருவதாக தலா 16 இலட்சம் ரூபா வீதம் 12 பேரிடம் ஒரு கோடியே 92 இலட்சம் ரூபா பணத்தை வாங்கி மோசடியில் ஈடுபட்டுவந்த சட்டவிரோத வெளிநாட்டு முகவர் நிலையம் ஒன்றை இன்று திங்கட்கிழமை (3) இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தினர் முற்றுகையிட்டதையடுத்து, மூதூரைச் சேர்ந்த 29 வயதுடைய முகவர் நிலைய உரிமையாளரை கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக தெரியவருவதாவது:

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் கல்முனை வீதியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் உரிமையாளர் முகநூல் ஊடாக ரூமேனியா, போலாந்து, சேபியா போன்ற நாடுகளுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் வேலைவாய்ப்பு உள்ளதாக விளம்பரம் செய்துவந்துள்ளார்.

இதனையடுத்து, வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெறுவதற்காக பலர் நேரடியாக அந்த முகவர் நிலையத்துக்கு சென்று விண்ணப்பப்படிவங்களை நிரப்பி, கடவுச்சீட்டுக்களின் பிரதிகள் மற்றும் பொலிஸ் நற்சான்று பத்திரங்கள் உட்பட ஆவணங்களுடன் 12 பேர் தலா 16 இலட்சம் ரூபா வீதம் 2023ஆம் ஆண்டு வழங்கியுள்ளனர்.

இருந்தபோதும்  அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பாமல் நீண்டகாலமாக இழுத்தடித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், பணத்தை வழங்கியவர்கள் பணத்தை திருப்பித் தருமாறு கேட்ட நிலையில் அதனை வழங்காததையடுத்து, அவருக்கு எதிராக சிலர் மட்டக்களப்பு விசேட புலனாய்வு பிரிவிடம் முறைப்பாடு செய்ததுடன் கொழும்பிலுள்ள அரச வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் 12 பேர் முறைப்பாடு செய்தனர்.

இதனையடுத்து வேலைவாய்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவு பணிப்பாளர் கபில கருணாரத்தின தலைமையிலான குழுவினர் சம்பவதினமான இன்று பகல் குறித்த வேலைவாய்பு முகவர் நிலையத்தை முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டபோது அந்த முகவர் நிலையம் பதிவு செய்யப்படாமல் போலியாக இயங்கி வந்துள்ளதுடன் ரூமேனியா போலாந்து, சேபியா மற்றும் ஜரோப்பிய நாடுகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்வதற்காக 74 பேரிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஆவணங்கள் அடங்கிய 74 கேவைகளை மீட்டனர்.

இதனை தொடர்ந்து முகவர் நிலையத்தில் காட்சிப்படுத்துவற்காக பெருத்தப்பட்டிருந்த  பெயர் பலகைகளை கழற்றி எடுத்ததுடன் அதன் உரிமையாளரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் 29 வயதுடைய மூதூரைச் சேர்ந்தவர் எனவும் இவரை விசாரணையின் பின்னர் மட்டக்களப்பு நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த முகவர் நிலையம் தொடர்பாக முகநூல் விளம்பரத்தை பார்த்து  வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெறுவதற்காக, யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா. மட்டக்களப்பு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 70 க்கு மேற்பட்டவர்கள் தலா 16 இலட்சம் தொடக்கம் 20 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளதாக பாதிக்கப்பட்டோர் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : நாளை...

2025-03-15 03:05:55
news-image

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தோட்ட...

2025-03-15 02:56:50
news-image

பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும்...

2025-03-15 02:46:42
news-image

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி...

2025-03-15 02:41:59
news-image

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர்...

2025-03-15 02:34:53