எம்மில் பலரும் கல்வி கற்று அரசாங்க பணிக்காக காத்திருக்காமல் வங்கியிடமிருந்தோ அல்லது தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்தோ கடன் பெற்று சிறிய அளவிலான முதலீட்டில் வணிக நிறுவனத்தை தொடங்குவர்.
பயிற்சியும், விடா முயற்சியும், ஆர்வமும் இருப்பதால் வணிக நிறுவனத்தை தொடங்கிய தருணத்தில் ஒருமுகமான கவனம் செலுத்தி தொழிலை நடத்துவார்கள். அத்துடன் தொழில் தொடங்கும் போது சோதிட நிபுணர்கள் மற்றும் ஆன்மீக முன்னோர்களின் ஆசியையும், வழிகாட்டலையும் பெற்றிருப்பார்கள்.
அதன் பிறகு சில காலம் தொழில் வணிகம் சிறப்பாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கும். ஆனால் வாழ்க்கையும் , தொழிலும் எப்போதும் சீராக சென்று கொண்டிருக்காது என்பது எம்மில் அனைவருக்கும் தெரியும். சில தருணங்களில் கூடுதல் லாபமும், பல தருணங்களில் எதிர்பார்த்ததை விட கூடுதல் நஷ்டமும் ஏற்படும்.
இது போன்ற தருணங்களில் தாக்குப் பிடிப்பது தான் கடினமான பணியாக இருக்கும். இந்தத் தருணத்தில் தான் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் பலரும் பலன் தரும் குறிப்புகளை குறிப்பாக இதுபோன்ற தொழிலில் ஏற்படும் தடைகளை அகற்றுவதற்கு சூட்சமமான இறை வழிபாட்டு முறையை முன்மொழிந்திருக்கிறார்கள்.
நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அந்த திசையில் இருந்து மேற்கு நோக்கி சிவபெருமான் இருக்கும் ஆலயத்தை தெரிவு செய்து கொள்ளுங்கள். மேற்கு திசை நோக்கிய சிவபெருமான் இருக்கும் ஆலயத்தில் இரவு நேரத்தில் நடைபெறும் அர்த்த ஜாம பூசைக்கு நல்லெண்ணெய் வாங்கித் தாருங்கள்.
அதனுடன் அந்த நல்லெண்ணெய் அபிஷேகம் நடைபெறுவதையும் பய பக்தி உடன் தரிசனம் செய்யுங்கள். இதனை தொடர்ச்சியாக ஆறு வாரத்திற்கு மேற்கொள்ளுங்கள். சனிக்கிழமைகளிலும் இதனை மேற்கொள்ளலாம். தொடர்ந்து ஆறு சனிக்கிழமைகளில் சிவபெருமானின் அர்த்த ஜாம பூஜையை நல்லெண்ணெய் அபிசேகத்துடன் தரிசித்தால் உங்களில் தொழிலில் ஏற்பட்டிருக்கும் நேரடியான மற்றும் மறைமுகமான தடைகள் அகன்று வாய்ப்புகள் அதிகரித்து லாபம் ஏற்படுவதை அனுபவத்தில் காணலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM