வாக்குவாதம் முற்றிய நிலையில் பாணந்துறை, களுதாவலை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதோடு உயிரிழந்த நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளார்.தாக்குதலுக்குள்ளான நபர் படுகாயமடைந்த நிலையில் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளார். 

பாணந்துறை, களுதாவலை பிரதேசத்தில் வசிக்கும் 58 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சந்தேகநபரை அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.மேலும்,அவரை கைது செய்வதற்காக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.