நடன இயக்குநரும், திரைப்பட இயக்குநருமான அம்மா ராஜசேகரின் மகனான ராகின் ராஜ், 'வெட்டு' எனும் திரைப்படத்தின் மூலம் தமிழில் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் முன்னோட்டத்தை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்டிருக்கிறார்.
தமிழ்- தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் 'வெட்டு ' எனும் திரைப்படத்தில் ராகின் ராஜ் , அங்கீதா நஸ்கார், அஜய் ராஜ் , எஸ்தர் நோரோனிகா, சத்யம் ராஜேஷ், விஜி சந்திரசேகர், ரோஹித் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சியாம் கே. நாயுடு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தர்ம தேஜா இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை தீபா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. சீனிவாசா கௌட் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் 14 ஆம் திகதி காதலர் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. தாய்ப்பாசத்திற்காக கொலைகாரனாக மாறும் மகனைப் பற்றிய கதை என்பதாலும், எக்சன் காட்சிகள்- சென்டிமென்ட் காட்சிகள் இடம் பிடித்திருப்பதாலும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM