நடிகை அஞ்சலி வெளியிட்ட 'எமகாதகி ' படத்தின் புதிய பாடல்

Published By: Digital Desk 2

03 Feb, 2025 | 04:04 PM
image

தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு திரையுலக நட்சத்திர நடிகையான ரூபா கதையின் நாயகியாக நடித்திருக்கும் 'எமகாதகி' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'உயிர் கூட்டுல..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையான அஞ்சலி அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவின்ருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் பெப்பின் ஜோர்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் உருவாகி வரும் 'எமகாதகி' எனும் திரைப்படத்தில் ரூபா, நரேந்திர பிரசாத் ,கீதா கைலாசம், ராஜு ராஜப்பன், சுபாஷ் ராமசாமி, ஹரிதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெஸின் ஜோர்ஜ் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை நய்சத் மீடியா ஒர்க்ஸ் மற்றும் அருணா ஸ்ரீ என்டர்டெய்ன்மெண்ட்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து  வெளியீட்டிற்காக காத்திருக்கும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ' உயிர் கூட்டுல வாழுற நீ என் காதல் சிட்டுக்குருவி..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் ஞானகரவேல் எழுத, பின்னணி பாடகர் கௌதம் பரத்வாஜ் பாடியிருக்கிறார். காதலை மையப்படுத்தி மெல்லிசையாக உருவாகி இருக்கும் இந்த பாடல் அனைத்து தரப்பு இசை ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்