பிக் பொஸ்' புகழ் சரவண விக்ரம் அறிமுகமாகும் 'டியர் ரதி'

Published By: Digital Desk 2

03 Feb, 2025 | 04:03 PM
image

சின்னத்திரை ரசிகர்களிடையே பிரபலமான பிக் பொஸ் நிகழ்ச்சியில் ஏழாம் சீசனின் போட்டியாளரான நடிகர் சரவண விக்ரம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் 'டியர் ரதி' எனும் திரைப்படத்தின் அறிமுக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் பிரவீண் கே. மணி இயக்கத்தில் உருவாகி வரும் ' டியர் ரதி' எனும் திரைப்படத்தில் சரவண விக்ரம் , ஹஸ்லி , ராஜேஷ் பாலச்சந்திரன், சாய் தினேஷ், யுவராஜ் ,சரவணன் பழனிச்சாமி, பசுபதி ராஜ், தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள், லோகேஷ் இளங்கோவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். ஜோன்ஸ் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை லாக் லைன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். மோகன மஞ்சுளா தயாரித்திருக்கிறார்.

காதல் கடவுள்களான ரதி மற்றும் மன்மதன் இடையேயான நவீன காலகட்டத்திய காதலை விவரிக்கும் படைப்பாக 'டியர் ரதி ' உருவாகி இருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்