நடிகர் டேனியல் பாலாஜி மறைவிற்கு முன் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்த 'ஆர் பி எம்' படத்தின் மோசன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
இயக்குநர் பிரசாத் பிரபாகர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆர் பி எம்' எனும் திரைப்படத்தில் டேனியல் பாலாஜி, கோவை சரளா, வை. ஜி மகேந்திரன், இளவரசு, தேவதர்ஷினி , சுனில் சுகதா, ஈஸ்வர் கிருஷ்ணா, தயா பிரசாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அனியன் சித்திரசாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெ. செபாஸ்டியன் ரோஸாரியோ இசையமைத்திருக்கிறார். சஸ்பென்ஸ் திரில்லர் ஜேனரிலான இந்த திரைப்படத்தை கோல்டன் ரீல் இண்டர்நேஷனல் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கல்பனா ராகவேந்தர் தயாரித்திருக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' நடிகர் டேனியல் பாலாஜி நடித்த கடைசி படம் இது. இதில் அவர் நடிப்பிற்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வட சென்னை பின்னணியில் கிரைம் வித் சஸ்பென்ஸ் திரில்லராக இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும்''' என்றார்.
இப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தினை பற்றிய புதிய தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்படும். என படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM