(நெவில் அன்தனி)
யாழ். இந்து கல்லூரிக்கும் பம்பலப்பிட்டி (கொழும்பு) இந்து கல்லூரிக்கும் இடையிலான 14ஆவது வருடாந்த 'இந்துக்களின் சமர்' யாழ். இந்து கல்லூரி மைதானத்தில் இம் மாதம் 7ஆம், 8ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இளைஞரையும் விளையாட்டுத்துறையையும் ஊக்குவிக்கும் நன்னோக்குடன் இந்துக்களின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டிக்கு ஜனசக்தி குழுமம் (JXG) தொடர்ச்சியான மூன்றாவது வருடமாக பிரதான அனுசரணை வழங்குகிறது.
இந்த வருட அத்தியாயம் கொழும்பில் நடைபெறுவதாக இருந்த போதிலும் பம்பலப்பிட்டி இந்து கல்லூரியின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த வருடப் போட்டியை நடத்த யாழ். இந்து கல்லூரி முன்வந்தமை பாராட்டுக்குரியதாகும்.
பம்பலப்பிட்டி கல்லூரி அடுத்த வருடம் தனது பவள விழா கொண்டாட்டங்களை மிகவும் பிரமாண்டமான முறையில் ஆரம்பிக்கவுள்ளதால் இந்துக்களின் சமரையும் அந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இப் போட்டி தொடர்பான ஊடக சந்திப்பும், அனுசரணை வழங்கும் நிகழ்வும் தமிழ் யூனியன் அண்ட் அத்லெட்டிக் க்ளப் (TU & AU) கேட்போர்கூடத்தில் அண்மையில் நடைபெற்றது.
இந்த வைபவத்தில் பேசிய ஜனசக்தி நிறுவனத்தின் ஸ்தாபகரும் அதிபருமான சந்த்ரா ஷாவ்டர், 'வடக்கிலுள்ள இந்து கல்லூரிக்கும் தெற்கிலுள்ள இந்து கல்லூரிக்கும் இடையிலான இந்தப் போட்டி மிகவும் சிறப்வுவாய்ந்ததாகும். இந்த மாபெரும் கிரிக்கெட் சமருக்கு அனுசரணை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் அடைகிறோம்' என்றார்.
இதேவேளை, இந்துக்களின் சமர்' ஒரு மறக்க முடியாத மாபெரும் கிரிக்கெட் போட்டியாகும் என ஜனசக்தி குழுமத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி கமிக்க டி சில்வா தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 'சமூகங்களையும் குழுக்களையும் ஒன்றிணைக்கும் ஒரு கருவி விளையாட்டுத்துறை யாகும். 400 கிலோ மீற்றர் வித்தியாச தொலைவில் இருக்கும் இந்த இரண்டு பாடசாலைகளும் விளையாட்டுத்துறை மூலம் சகோதரத்துவத்தை கட்டி எழுப்ப முடியும் என்பதையும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை உருவாக்கமுடியும் என்பதையும் வெளிப்படுத்திவருகின்றன' என்றார்.
இப் போட்டிக்கான அனுசரணை உதவுத் தொகைக்குரிய மாதிரி ஆவணத்தை ஜனசக்தி குழுமத்தின் ஸ்தாபகரும் அதிபருமான சந்த்ரா ஷாவ்டரிமிருந்து யாழ். இந்து கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கொழும்பு கிளைத் தலைவர் ஜீ. வசந்தன் பெற்றுக்கொண்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM