வடபிராந்திய முயற்சியாண்மைகளை வலுப்படுத்த டேவிட் பீரிஸ் குழுமம் அறிமுகப்படுத்தியுள்ள ‘தளிர்’

03 Feb, 2025 | 02:56 PM
image

இலங்கையின் வடபிராந்தியத்தில் முயற்சியாண்மையை ஊக்குவித்து பொருளாதார மேம்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் டேவிட் பீரிஸ் குழுமத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டமே ‘தளிர்’ ஆகும். புதுமை நிறைந்த, விரிவுபடுத்தக் கூடிய மற்றும் நிலைத்திருக்கக் கூடிய வணிக முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம், வாகனத்துறை (Automotive)> சரக்குப் போக்குவரத்து (Logistics), தகவல் தொழில்நுட்பம் (IT), சுற்றுலா(Tourism), விவசாயம் (Agriculture) மற்றும் ஏற்றுமதி (Exports) ஆகிய துறைகளில் கணிசமான முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

வாகனத் தயாரிப்பு மற்றும் சேவைகள்(Automotive products and Services)>  நிதிச் சேவைகள் (Financial services), சரக்குப்போக்குவரத்து (Logistics), களஞ்சியப்படுத்தல் செயற்பாடுகள் warehouse operations, மோட்டார் பந்தயம் (Racing),   பொழுதுபோக்கு (Leisure), தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பாடல் (Information and Communication technologies) ரியல் எஸ்டேட் (Real Estate), கப்பல்போக்கு வரவு (Shipping), கரையோர சேவைகள் (Marine services) மற்றும் சூரிய சக்தி (Solar Energy) போன்ற துறைகளில் கடந்த மூன்று தசாப்தத்திற்கு மேல் 35 கம்பனிகளைக் கொண்டு இயங்கும் டேவிட் பீரிஸ் குழுமம் இந்த ‘தளிர்’ திட்டத்தை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இத்திட்டத்தி ல் இணைந்துகொள்ள விரும்பும் முயற்சியாண்மைகளிடமிருந்து விண்ணப்பங்களை டேவிட் பீரிஸ் குழுமம் எதிர்பார்க்கின்றது. ஆர்வமுள்ள முயற்சியாளர்கள் வடபிராந்தியத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதுடன், நடைமுறைப்படுத்தப்படக் கூடிய மற்றும் விரிவாக்கப்படக்கூடிய எண்ணக்கருக்களை விவரமாக, செயற்படுத்தப்படக் கூடிய வணிகத் திட்டங்களாக முன்வைக்க வேண்டும். இவ்வாறு முன்வைக்கப்படும் திட்டங்கள் சமூகத்தில் தாக்கம் செலுத்தக் கூடியவையாகவும், வளர்ச்சிக்கான தெளிவான பாதையை வெளிப்படுத்தக்கூடியவையாகவும் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. 

தெரிவுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களில் மூன்று ஆரம்ப வணிகங்களுக்கு 500,000 ரூபா வரையான மானியம் வழங்கப்படும். அத்துடன், தெரிவுசெய்யப்பட்ட திட்டங்களுக்கு 10 மில்லியன் ரூபா வரை, பங்கு அடிப்படையிலான ஆதரவு கொடுக்கப்படும். நிதி ரீதியான நன்மைகளுக்கு அப்பால், வணிகம், சந்தைப்படுத்தல் மற்றும் நிதி முகாமைத்துவம் ஆகியவற்றில் திறன்களை மேம்படுத்தல் குறித்த பயிற்சிகளும் வழங்கப்படும். இதற்கு மேலதிகமாக தொழில்துறையின் நிபுணர்கள் மற்றும் முன்னணி வணிகர்களிடமிருந்து வழிகாட்டுதல்களும், தொழில்துறை நிபுணர்களுடனான தொடர்புகளும் ஏற்படும். 

இதன் ஊடாக தொழில்முயற்சியாளர்கள் எதிர்காலத்தில் தமது பயணத்தை வெற்றிகரமாகத் தொடரமுடியும். வடபிராந்தியத்தின் மேம்பாட்டில் அக்கறை காண்பித்துவரும் டேவிட் பீரிஸ் குழுமம், எதிர்கால வணிகத்தலைவர்களை உருவாக்கும் நோக்கில் ஆரம்பித்துள்ள தளிர் திட்டத்திற்கு நீங்களும் இன்றே விண்ணப்பித்து வாழ்க்கையில் முன்னேறுவதுடன் பிராந்தியத்தின் முன்னேற்றத்திலும் பங்காளர்களாகுங்கள். நீங்கள் விண்ணப்பிக்க வேண்டிய இறுதித் திகதி 2025 பெப்ரவரி 10ஆம் திகதியாகும். தளிர் திட்டம் குறித்த மேலதிக தகவல்களை https://www.dpg.lk/thalirஎன்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும். அத்துடன், thalir@dpmco.com என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாக தளிர் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறச்செய்தல்: வளர்ச்சியை...

2025-02-09 15:23:19
news-image

SLIM National Sales Awards 2024...

2025-02-08 18:18:45
news-image

யூனியன் அஷ்யூரன்ஸ் பாங்கசூரன்ஸ் MDRT தகைமையாளர்களுக்கான...

2025-02-08 18:18:18
news-image

முன்பள்ளி கல்வியை மேம்படுத்த UNICEFஉடன் இணையும்...

2025-02-06 10:13:01
news-image

விலை உறுதிப்பாடு : தவிர்க்க முடியாததொன்றா?

2025-02-05 18:33:08
news-image

கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்

2025-02-05 17:22:13
news-image

இலங்கையின் "சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்" கெசினோ ...

2025-02-05 17:05:26
news-image

சம்பத் வங்கி மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ்...

2025-02-05 11:44:52
news-image

TAGS விருதுகள் 2024 – Prime...

2025-02-05 11:41:48
news-image

வடபிராந்திய முயற்சியாண்மைகளை வலுப்படுத்த டேவிட் பீரிஸ்...

2025-02-03 14:56:40
news-image

‘C'est La Vie’– பிரான்ஸ் நாட்டின்...

2025-02-02 09:41:53
news-image

இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாக...

2025-01-30 12:16:32