வெள்ளப்பெருக்கு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மற்றும் கேகாலை ஆகிய 8 மாவட்டங்களிலும் உள்ள பாடசாலைகள் மீண்டும் இம்மாதம் 05ம் திகதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் எதிர்வரும் ஒரு சில வாரங்களுக்கு சீருடை அணிந்தே பாடசாலைக்கு வர வேண்டிய கட்டாயம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.