(எம்.மனோசித்ரா)
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த இந்திய மீன்பிடிக் கப்பல் ஒன்று மன்னார் தெற்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த கப்பலிலிருந்த 10 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படையினர் இன்று திங்கட்கிழமை அதிகாலை, மன்னாருக்கு தெற்கே இலங்கை கடற்பரப்பில் முன்னெடுத்த விசேட ரோந்து நடவடிக்கையின் போது, அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் படகுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு மீன்பிடிப்படகுகள் நாட்டின் கடற்பரப்பில் அத்துமீறி மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கவும் , உள்ளுர் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது . அந்த வகையில் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீட்கப்பட்ட படகுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் பரிசோதகர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM