MCB வங்கியின் வெள்ளவத்தை கிளை மீள அங்குரார்ப்பணம்

Published By: Priyatharshan

02 Jun, 2017 | 04:50 PM
image

வாடிக்கையாளர்களுக்கு நவீன வங்கியியல் அனுபவத்தை பெற்றுக்கொடுக்கும் கொள்கையின் பிரகாரம், வேகமாக வளர்ந்து வரும், பாகிஸ்தானை தளமாகக் கொண்டியங்கும் MCB வங்கி, புனருத்தாரணம் செய்து, மெருகேற்றம் செய்யப்பட்ட தனது வெள்ளவத்தை கிளையை 2017 மே மாதம் 26 ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்திருந்தது.

இந்த அங்குரார்ப்பண நிகழ்வில், பிரதம அதிதியாக இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநர் ஆர்.ஏ.ஏ. ஜயலத் கலந்து கொண்டார். 

உள்நாட்டு வங்கியியல் துறைக்கு MCB வங்கி வழங்கி வரும் பங்களிப்புக்காக அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்ததுடன், விஸ்தரிக்கப்பட்ட கிளை வலையமைப்பினூடாக உள்நாட்டு சமூகத்துக்கு ஆற்றும் பங்களிப்புக்கும் அவர் பாராட்டுதல்களை தெரிவித்திருந்தர். 

இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக இடைக்கால உயர் ஸ்தானிகர் கலாநிதி. சஃவ்ராஸ் அஹமட் கான் சிப்ரா மற்றும் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் ஆலோசகர் ஜன்பாஸ் கான் ஆகியோர் கலந்து கொண்டனர். MCB பாங்க் லிமிட்டெடின் இலங்கைக்கான பொது முகாமையளார் ஆலி ஷாஃவி மற்றும் இதர சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

MCB வெள்ளவத்தை கிளை சகல பிரத்தியேக, சிறிய மற்றும் நடுத்தரளவு மற்றும் கூட்டாண்மை வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு சேவைகளை வழங்குவதுடன், கொடுக்கல் வாங்கல் கணக்குகள், கடன்கள், லீசிங், பண அனுப்பல்கள், இணையதள வங்கியியல் மற்றும் சர்வதேச வர்த்தக சேவைகள் போன்ற பரிபூரண நிதித்தீர்வுகள் மற்றும் சேவைகளையும் வழங்கும். வெள்ளவத்தை வங்கிக்கிளையின் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான வைப்பு பெட்டக வசதிகளையும் வழங்குகிறது.

ஒன்றுகூடியிருந்தோர் மத்தியில் நாட்டுக்கான பொது முகாமையாளர் ஆலி ஷாஃவி கருத்துத் தெரிவிக்கையில்,

“MCB வங்கியில் நாம் மேற்கொள்ளும் சகல செயற்பாடுகளின் போதும் வாடிக்கையாளர்களுக்கு முக்கியத்துவம் வழங்குகிறோம். வாடிக்கையாளர்களுக்கு நவீன வங்கியியல் சூழல் மற்றும் சௌகரியத்தை பெற்றுக்கொடுக்கும் எமது நடவடிக்கைகளில் வெள்ளவத்தை கிளையின் மெருகேற்றமும் முக்கிய அங்கமாக அமைந்துள்ளது. 

எமது ஒழுங்குபடுத்துநர்கள், வாடிக்கையாளர்கள், இதர பங்காளர்கள் ஆகியோரின் உதவி மற்றும் வழிகாட்டலுடன் நாம் தொடர்ந்து வளர்ச்சியடைவோம் எனவும், இலங்கையில் தொடர்ந்து முதலீடுகளை மேற்கொள்வோம்” எனக் குறிப்பிட்டார்.

இலங்கையில் MCB பாங்க் லிமிட்டெட் தனது செயற்பாடுகளை 1994 ஆம் ஆண்டு ஆரம்பித்திருந்தது. உண்மைத்தன்மை, மதிப்பு, சிறப்பு, வாடிக்கையாளர் மையம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றுடன் பிரதான செயற்பாடுகளை நாட்டில் ஆரம்பித்திருந்தது. இலங்கையில் இயங்கும் வெளிநாட்டு வங்கி கிளை வலையமைப்பில் இரண்டாவது உயர்ந்த ஸ்தானத்தை தன்வசம் கொண்டுள்ளது. உறுதியான [SL] A+ தரப்படுத்தலை ICRA லங்கா லிமிட்டெடிடமிருந்து பெற்றுள்ளது.

கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, மருதானை, வெள்ளவத்தை, கொள்ளுப்பிட்டி, கண்டி, காலி மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் தனது கிளைகளை கொண்டுள்ளது. வார நாட்களில் பி.ப 4.00 மணி வரை நீடிக்கப்பட்ட வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. MCB வங்கி வாடிக்கையாளர்கள் நாடு முழுவதிலும் காணப்படும் LankaPay வலையமைப்பைச் சேர்ந்த 3500க்கும் அதிகமான ATM களிலிருந்து தமது கணக்குகளை அணுக முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்கேன் தரு திரிய’ ஊடாக மஹியங்கனை,...

2025-06-12 16:30:51
news-image

LOLC குழுமத்தில் ரூபா. 41 பில்லியன்...

2025-06-12 12:29:00
news-image

AIA பொசன் வந்தனா - யாத்ரீகர்களுக்கான...

2025-06-12 12:14:32
news-image

மலைநாட்டு தலைநகரில் உயர் கல்வி மாற்றத்திற்கு...

2025-06-12 12:34:32
news-image

Kedella Construction Expo 2025 உடனான...

2025-06-11 12:09:07
news-image

SLT-MOBITEL முதல் காலாண்டில் நிலையான இலாப...

2025-06-11 12:06:41
news-image

எதிர்காலத்தில் இலங்கை: கொத்மலே மூலம் கிராமிய...

2025-06-10 11:04:57
news-image

டயலொக் சுவர்ண சக்தி சிறப்புத் திட்டத்தின்...

2025-06-10 10:37:41
news-image

கிறேஷியன் நிதியம், ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை...

2025-06-06 19:09:18
news-image

32 ஆவது கிறேஷியன் பரிசுக்கான இறுதிப்பட்டியலை...

2025-06-06 14:34:33
news-image

இலங்கை-அவுஸ்திரேலியா கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு –...

2025-06-05 11:27:22
news-image

அசல் தாய்லாந்து உணவுகளுக்கான முன்னோடி உணவகமான...

2025-06-04 18:10:41