மலேசிய எழுத்தாளரான பெருமாள் இராஜேந்திரனின் "மலேசிய இலங்கை இலக்கியம் - ஓர் அறிமுகம்" நூல் வெளியீட்டு நிகழ்வும் திருகோணமலை எழுத்தாளர் சந்திப்பும் திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது.
இந்த நிகழ்வு எமுத்தாளர் நீலையூர் சுதா தலைமையில் நடைபெற்றது.
இதன்போது மலேசியாவின் முன்னாள் தமிழ்ச் சங்கத் தலைவரும் எழுத்தாளரும் சிறந்த பேச்சாளருமான பெருமாள் இராஜேந்திரன் தனது நூலின் முதல் பிரதியை திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் பிரதம குரு, “வேதாகம மாமணி” பிரம்மஸ்ரீ சோ. இரவிச்சந்திர குருக்களுக்கு வழங்கினார்.
அதனை தொடர்ந்து, திருகோணமலை எழுத்தாளர்களுக்கு நூல் பிரதிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலயத்தின் பரிபாலன சபை தலைவர் திலகரெட்ணம் துஷ்யந்தன் சிறப்புரை ஆற்றினார்.
மலேசியாவில் இருந்து வருகைதந்த 36 எழுத்தாளர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மேலும், இந்த நிகழ்வில் எழுத்தாளர்கள் சார்பாக நீலையூர் சுதா பெருமாள் இராஜேந்திரன் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM