நீச்சல் உடை புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட சமந்தாவுக்கு ரசிகர்கள் பலர் கண்டனம் தெரிவித்தள்ளனர். 

சமந்தாவுக்கும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுக்கும் வருகிற அக்டோபர் 6ஆம் திகதி ஐதராபாத்தில் திருமணம் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் சமந்தா அவரது இன்ஸ்டாகிராமில் நீச்சல் உடை, உள்ளாடை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் சிறிய விடுமுறை கொண்டாட்டம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

தனது ரசிகர்களை மகிழ்விக்கும் நோக்கத்தில் இந்த படத்தை வெளியிட்டுள்ளார். ஆனால் இதை பார்த்த பல ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர்.

‘உங்கள் ரசிகனாக இருப்பது எனக்கு அசிங்கமாக இருக்கிறது’ என்று ஒருவர் கூறி இருக்கிறார். நல்ல குடும்ப வாழ்க்கை வாய்த்திருக்கிறது. இதை கெடுக்க வேண்டாம். புகைப்படத்தை நீக்கிவிடுங்கள் என்று மற்றொரு ரசிகர் அறிவுரை வழங்கி உள்ளார். இன்னொரு ரசிகர், ‘இன்றைய கால கட்டத்தில் சிலர் மாடலிங், டிரண்டிங், பேஷன் என்ற பெயரில் தங்களுடைய அந்தரங்கத்தை பகிர்ந்து கொள்வதன் மூலம் தவறான எண்ணங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். இதற்கு ‘லைக்’, ‘கமெண்ட்’, ‘ஷேர்’ எதிர்பார்ப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இந்த நாடு கெட்டுப்போவதற்கு இதுவும் காரணம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘மனிதன் நல்லதை ஏற்க தாமதம் ஆகும். ஆனால் இதுபோன்ற ஆபாசங்கள் வேகமாக பகிரப்படும். எனவே, இதுபோன்ற சர்ச்சைக்கு உள்ளாக வேண்டாம்.

பெண்களுக்கு சுதந்திரம் உண்டு. ஆனால் அவை பிறரின் மனதில் தவறான எண்ணங்களை உருவாக்குவதாக இருக்க கூடாது’ என்று விதம்விதமாக ரசிகர்கள் சமந்தாவை விமர்சனம் செய்து இருக்கிறார்கள்.