எம்முடைய வீடுகளில் இருக்கும் குழந்தைகளுக்கும், பிறந்த பச்சிளங்குழந்தைகளுக்கும் திடீரென்று காய்ச்சல் வரும். நாமும் உடனே பாராசிட்டமல் மருந்தையோ அல்லது மாத்திரையையோ உடனடி நிவாரணமாக கொடுத்து சமாளிக்கிறோம். ஆனால் யாரும் காய்ச்சல் ஏன் வருகிறது என்று தெரிந்துகொள்வதில்லை.

ஒவ்வொருவரின் உடலின் வெப்பநிலை சராசரியாக 98,4 டிகிரி பாரன்ஹீட் இருக்கும். இதைவிட வெப்பநிலை  அதிகமாகும் போது ஏற்படுவது தான் காய்ச்சல். ஆனால் காய்ச்சல் என்பது நோயல்ல. எம்முடைய உடலுக்குள் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று நுழைவதே அறிவிக்கும் அறிகுறி தான் காய்ச்சல்.

இந்நிலையில் பெரியவர்களுக்கு இந்த வெப்ப நிலை 103 டிகிரி வரை உயர்ந்தாலும் பிரச்சினை இல்லை. ஆனால் சிறார்களுக்கும், பச்சிளங்குழந்தைகளுக்கும் இயல்பான வெப்பநிலையை விட சற்று உயர்ந்தாலும் தீவிர தொற்று ஏற்பட்டிருக்கிறது என்று பொருள் கொள்ளலாம்.

ஜலதோஷம், அதிகப்படியான வெயில், உடலில் நீர்ச்சதது குறைவது, கட்டிகள், அதிகப்படியான வேலை,நிமோனியா, ஓர்த்தரைடீஸ், தீவிர இரத்த அழுத்தத்திற்கு பயன்படும் ஆன்டிபயாடீக் மாத்திரைகள், சைனஸ், சிறுநீரகத் தொற்று, ரத்தம் உறைவது போன்ற பல காரணங்களால் உடலுக்குள் உஷ்ணம் அதிகரிக்கலாம். அதே சமயத்தில் பருவ நிலை மாறும் போது நீரின் மூலம் பாக்டீரியா, வைரஸ் கிருமிகளின் தொற்று பரவுவது அதிகமாக இருக்கும். இதன் பாதிப்பாலும் காய்ச்சல் வரலாம். அதனால் பொதுமக்களுக்கும், சிறார்களுக்கும், பச்சிளங்குழந்தைகளுக்கும் காய்ச்சல் வந்தால் முறையாக மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை செய்து கொள்வதே சிறந்த பாதுகாப்பு.

Dr.பத்மா

தொகுப்பு அனுஷா.