(எம்.மனோசித்ரா)
நெல்லுக்கு உற்பத்தி செலவு 30 சதவீதத்தையும் சேர்த்து 130 ரூபாவை நிர்ணயிப்பதாக அரசாங்கம் கூறியது. ஆனால் 115 ரூபா நிர்ணய விலையாக அறிவிக்கப்படவுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது. அவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டால் அரசாங்கத்தின் வாக்குறுதிகள் முற்றிலும் பொய்யானவை என்பது நாட்டுக்கு வெளிப்படுத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (2) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நெல்லுக்கு உற்பத்தி செலவு 30 சதவீதத்தையும் சேர்த்து 130 ரூபாவை நிர்ணயிப்பதாக அரசாங்கம் கூறியது. ஆனால் 115 ரூபா நிர்ணய விலையாக அறிவிக்கப்படவுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது. உற்பத்தி செலவுக்கு அப்பால் விவசாயிகளின் வாழ்க்கை செலவு பற்றி சிந்திக்க வேண்டும். நெல்லுக்கு 130 ரூபா நிர்ணய விலை அறிவிக்கப்படும் என விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு என்னவாயிற்று?
130 ரூபா நிர்ணய விலையை அமைச்சரவை தீர்மானிக்காவிட்டால் அரசாங்கத்தின் மிகப் பெரிய பொய் மக்களுக்கு வெளிப்படுத்தப்படும். நெல் கொள்வனவுக்கு அரசாங்கத்தினால் 5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் திறைசேரியிடமிருந்து இன்னும் பணம் பெற்றுக் கொள்ளப்படவில்லை. இந்த பில்லியனில் 40 000 மெட்ரிக் தொன் அரிசியை மாத்திரமே கொள்வனவு செய்ய முடியும்.
40 000 மெட்ரிக் தொன் அரிசியை கொள்வனவு செய்து ஜனாதிபதி கூறியதைப் போன்று பாரிய களஞ்சியசாலைகளை உருவாக்க முடியுமா? நுகர்வோரின் பிரச்சினையை விவசாயிகள் பக்கம் திருப்பி விடும் நடவடிக்கையையே அரசாங்கம் முன்னெடுக்கவிருக்கிறது. அரசாங்கம் கூறிய முறைமை மாற்றம் இதுவா? ட்ரம்ப் கூறியதைப் போன்று தற்போது சகல மாற்றங்களையும் ஏற்படுத்தி விட்டார். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 3 மாதங்கள் கடந்தும் என்ன நடந்தது?
பொருளாதார மறுசீரமைப்பு சட்டத்துக்கு எதிராக ஜே.வி.பி. நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. ஆனால் இன்று ஜனாதிபதி பொருளாதார மறுசீரமைப்பு சட்டம் சிறந்ததல்லவா என்று கூறுகின்றார். அமைச்சர்களான சுனில் ஹந்துனெத்தி மற்றும் ஹர்ஷண நாணயக்கார ஆகியோர் இந்த சட்டம் அரசியலைமைப்பு முரணானது எனக் கூறினர். இன்று அவர்கள் எங்கு சென்றுள்ளனர்? இந்த சட்டத்துக்கமையவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வரவு - செலவு திட்டத்தை சமர்ப்பிக்க விருக்கின்றார் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM