சுதந்திர தின நிகழ்வுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி; விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி

Published By: Vishnu

02 Feb, 2025 | 07:15 PM
image

(எம்.மனோசித்ரா)

'தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணி திரள்வோம்' என்ற தொனிப்பொருளில் இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் செவ்வாய்கிழமை (4) இடம்பெறவுள்ளன. வழமைக்கு மாறாக இம்முறை காலி முகத்திடலில் அன்றி சுதந்திர சதுக்கத்தில் இந்நிகழ்வுகளுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இம்முறை சுதந்திர தின நிகழ்வுகளுக்காக 80 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தன்று நண்பகல் 12 மணிக்கு கடற்படையினரால் சம்பிரதாய பூர்வமாக 25 மரியாதை வேட்டுகள் தீர்க்கப்படும். பொலிஸாருடன் இணைந்து அன்றைய தினத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அன்றைய தினத்தில் விசேட போக்கவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மக்களுக்கு ஏற்படக் கூடிய அசௌகரியங்களைக் குறைக்கும் வகையில் ஒத்திகைகளும், பிரதான நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதன் போது இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ தெரிவிக்கையில், ஒட்டுமொத்தமாக 4421 பேர் மரியாதை அணி வகுப்புக்களில் பங்கேற்கவுள்ளனர். அவர்களில் 1211 இராணுவ வீரர்களும், 668 கடற்படை வீரர்களும், 461 விமானப்படை வீரர்களும், 289 பொலிஸாரும், 182 விசேட அதிரடிப்படையினரும், 175 சிவில் பாதுகாப்பு படையினரும், 486 தேசிய கெடட் படையினரும் உள்ளடங்குகின்றனர்.

சுதந்திர தின நிகழ்வின் பங்கேற்கும் படை வீரர்களின் எண்ணிக்கை 40 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 6745 வீரர்கள் மரியாதை அணிவகுப்புக்களில் பங்கேற்றிருந்த நிலையில், இம்முறை அந்த எண்ணிக்கை 4421 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அத்தோடு இம்முறை எவ்வித வாகன அணிவகுப்பும் இடம்பெறாது.

தேசிய கொடியை ஏந்திச் செல்வதற்காக விமானப்படையின் 3 உலங்கு வானூர்திகள் மாத்திரமே பயன்படுத்தப்படும். கடந்த ஆண்டு 19 உலங்கு வானூர்திகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. அத்தோடு இம்முறை எவ்வித வாகன அணிவகுப்பும் இடம்பெறாது. முப்படை வீரர்களின் மரியாதை அணிவகுப்பு மாத்திரமே இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதுதொடர்பில் முல்லையில்...

2025-03-23 01:05:33
news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17