நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 208 ஆக உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இவ் அனர்த்தங்களில் சிக்கி 72 பேர் காயமடைந்துள்ள நிலையில் 92 பேர் காணாமல்போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 175,216 குடும்பங்களைச் சேர்ந்த 677,241 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 1,735 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் 9,432 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு பாதிப்படைந்த 17,446 குடும்பங்களைச் சேர்ந்த 65,817 பேர்  321 பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.