ஊடகவியலாளர் வசந்த சந்திரபாலவின் உயிரோட்டமான புகைப்படக் கண்காட்சி

Published By: Digital Desk 2

02 Feb, 2025 | 05:27 PM
image

சிரேஷ்ட ஊடகவியலாளரும் புகைப்பட கலைஞருமான  வசந்த சந்திரபாலவினால் கடந்த  ஜனவரி மாதம்  29 ,30, 31 , மற்றும் பெப்ரவரி மாதம்  01 ம் திகதி இரவு 10.00 மணி வரையும் அம்பாறை நகர மண்டபத்தில் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற புகைப்படக் கண்காட்சி ("வனதிவி சரணிய") பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கடின முயற்சியுடன் கூடிய அர்ப்பணிப்புடன்  அழகிய முறையில் ஒவ்வொரு புகைப்படங்களையும் ஆவணமாக்கி வாசகர்களின் பாராட்டினை அவர் பெற்றிருக்கின்றார்.இவர் அம்பாறை மாவட்டத்தை வதிவிடமாக கொண்டுள்ளதுடன்  30 வருட அனுபவமுள்ள உள்நாட்டு போரில் பல்வேறு சாட்சிகளை கொண்ட  ஊடகவியலாளர் ஆவார்.அத்துடன் போர் கால  செய்திகளின் ஊடாக தான் பெற்ற  அனுபவங்களை எதிர்காலத் தலைமுறையினருக்குக் கடத்தும் நோக்கில்  “கண்ணீரால் கழுவப்படாத நினைவுகள்” என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை இங்கு  வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளார்.  

சிரேஷ்ட ஊடகவியலாளர் வசந்த சந்திரப்பால கடந்த பல  வருடங்களுக்கு மேலாக ஊடகத்துறையில் பல அனுபவங்களுடன்  சிறப்பாக செயற்படுவதுடன் அவர் சிறந்த தத்துரூபமான புகைப்பட கலைஞர் ஆவார்.இலங்கையில் பிரபலமான தொலைக்காட்சிகளான   ஹிரு அத தெரண  தொலைக்காட்சிகளில் பிராந்திய செய்தியாளராகவும் செயற்பட்டு வருவதுடன் தேசிய பத்திரிகைகள் வானொலி இணையங்களிலும் ஊடகவியலாளராக செயற்படுகின்றார்.

குறித்த  கண்காட்சியில் இறைவனின் படைப்புகளில் உள்ள ஒவ்வொரு விநோதங்களையும் ஒரு வில்லை ஊடாக  ஒவ்வொரு புகைப்படங்களும்  அவரது ஆற்றலையும் புதிய யுக்திகளையும் கொண்டு உயிரோட்டமாக மிளிர்கின்றது.இயற்கையான காடுகளில் உள்ள மிருகங்கள் பறவைகள் அவற்றின் வாழ்விடங்கள் முதல் அவற்றின் ஒவ்வொரு அசைவுகளையும் ரசித்து அழகாக புகைப்படமாக்கி ஆவணப்படுத்தியுள்ளமை இக்கண்காட்சியின் சிறப்பம்சமாகும்.இதே வேளை பொழுது போக்கிற்காக பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகளை  வனவிலங்கு சரணாலயங்களுக்குச் சென்று தனிமனிதனாக நின்றும்    இரவு நேரங்களில் கூட அழகிய முறையில் புகைப்படங்கள் எடுத்திருக்கின்றார்.  இக்கண்காட்சியில் பார்ப்பதற்கு அரிய பறவைகள் விலங்குகள் உள்ளிட்டவைகளை கூட அருமையாக பல்வேறு சந்தர்ப்பங்களில் புகைப்படமாக்கப் பட்டுள்ளதுடன்  பார்வையாளர்களின் பாராட்டையும்  பெற்றிருக்கின்றது.

இவ்வாறான பல அரிய  புகைப்படங்களை சிறந்த அழகிய உள்ளுணர்வுடன்  மிகுந்த கடின முயற்சியுடனும்  அர்ப்பணிப்புடனும்  ஆவணமாகி உள்ள  சிறந்த தத்துரூபமான புகைப்பட   கலைஞரும்  ஊடகவியலாளருமான  வஸந்த சந்திரபாலவின் கண்காட்சியை  அம்பாறை பிரதேச நூற்றுக்கணக்கான பாடசாலை மாணவர்கள் உட்பட பல தரப்பினரும்  பார்வையிட்டு பாராட்டி வருகின்றனர்.

மேலும்  கல்முனை மற்றும் சம்மாந்துறை பிரதேசங்களில் இப்புகைப்பட கண்காட்சி நடாத்துவதற்கான ஒழுங்குகளை சிரேஷ்ட ஊடகவியலாளரும் புகைப்பட கலைஞருமான   வசந்த சந்திரபால மேற்கொண்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்குளி கதிரானவத்தை ஶ்ரீ சாமுண்டீஸ்வரி அம்பாள்...

2025-02-10 18:35:26
news-image

குளோபல் ஆர்ட்ஸ் சர்வதேச நடன திருவிழா...

2025-02-10 15:53:58
news-image

சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியத்தின் அங்குரார்ப்பண...

2025-02-10 17:39:29
news-image

சர்வதேச அரேபிய சிறுத்தைகள் தினத்தை முன்னிட்டு...

2025-02-10 11:59:51
news-image

கலாபூஷணம் ஏ. பீர் முகம்மது எழுதிய...

2025-02-09 17:21:48
news-image

கண்டியில் தைப்பூச இரதோற்சவத் திருவிழா

2025-02-09 11:25:27
news-image

அன்புவழிபுரத்தில் “அடையாளம்” கவிதை நூல் அறிமுக...

2025-02-09 13:55:14
news-image

இலங்கை சட்டக் கல்லூரி சட்ட மாணவர்களின்...

2025-02-08 23:32:46
news-image

குளோபல் ஆர்ட்ஸ் சர்வதேச நடன திருவிழா...

2025-02-07 19:48:31
news-image

அமிர்தலிங்கம் மங்கையர்க்கரசி நினைவு இல்லம் மற்றும்...

2025-02-07 21:16:39
news-image

ஆழ்வாப்பிள்ளை கந்தசாமியின் பவள விழா

2025-02-07 14:34:55
news-image

சதன்யன் அசோகனின் மிருதங்க அரங்கேற்றம்

2025-02-07 14:38:23