(ஆர்.யசி )

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை  மேற்கொள்ள  இந்தியா, சீனா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளிட்ட  19 நாடுகள் முன்வந்துள்ளன. 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிவாரண நிதியாக இதுவரை கிடைத்துள்ளது. மேலும்  இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் நிவாரணப் பொருட்களுடன்  7 போர்க் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த நிலையில்  ஜப்பான், மாலைதீவுகளின் நிவாரணக் கப்பல்கள் இவ்வார இறுதியில் கொழும்பை வந்தடையும். 

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட மக்களுக்கு உதவிகளை வழங்கும் வகையில் சர்வதேச நாடுகள் தமது நிவாரணங்களை வழங்கி வருகின்றது. இந்தியா, சீனா, பாகிஸ்தான், அவிஸ்திரேலியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகளின் நிவாரணங்கள்  இலங்கைக்கு கிடைத்துள்ள நிலையில்  19 நாடுகள் இலங்கைக்கு உதவ தயாராக உள்ளது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.