இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 90 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய இஞ்சி மூடைகளுடன் நால்வர் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) கற்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக சட்டவிரோதமாக இஞ்சி மூடைகளை கடத்திச் செல்வதாக கற்பிட்டி பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து கற்பிட்டி சம்மட்டிவாடி கடற்கரைப் பகுதியிலிருந்து கொழும்பிற்கு லொறி மூலம் சந்தேக நபர்கள் இஞ்சி மூடைகளை கடத்திச் செல்ல முற்பட்டபோது கண்டக்குடா எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக குறித்த லொறியினை மறித்து சோதனையில் ஈடுப்பட்டபோது இஞ்சி மூடைகள் பொலிஸாரால் கைப்பற்ப்பட்டன.
இதன்போது 45 உரைகள் அடங்கிய 1839 கிலோகொராம் இஞ்சி மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன் மதிப்பு 90 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியென மதிப்பிடப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புத்தளம் மற்றும் மதுரங்குளி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் இவர்களிடமிருந்து இஞ்சி மூடைகளை ஏற்றிச் சென்ற லொறியையும் உளவு பார்கச் சென்ற மோட்டார் சைக்கிளையும் கற்பிட்டி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரையும் கைப்பற்றிய இஞ்சி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை கட்டுநாயக்க சுங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM