வைரஸ் தாக்கம் : அனைத்து பன்றிகளையும் இழந்த கிளிநொச்சி பண்ணையாளருக்கு பல இலட்சம் ரூபா இழப்பு

01 Feb, 2025 | 08:42 PM
image

கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்தில்  பன்றி பண்ணையில் இருந்த  அனைத்து பன்றிகளும் வைரஸ் தாக்கம் இறந்து விட்டதாக பண்ணை உரிமையாளர் கவலை தெரிவித்துள்ளார்.

பல இலட்சங்கள்  முதலீடு செய்து பன்றி பண்ணையை நடாத்தி வந்த நிலையில் தற்போது நாடாளவிய ரீதியில் பரவி வைரஸ்   நோய்த்தாக்கம் காரணமாக தங்கள் பண்ணையில் உள்ள அனைத்து பன்றிகளும் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ள அவர் இதன் மூலம்  75 இலட்சத்திற்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய பண்ணையில் உள்ள 150 வரையான பெரிய பன்றிகளும், 100 இற்கு மேற்பட்ட பன்றி குட்டிகளும் இறந்துவிட்டதாக தெரிவித்துளள அவர். இந்த வைரஸ்த்தாக்கம் ஏற்பட்டவுடன் பன்றி ஒரு நாள் உணவு உட்கொள்ளாது இருக்கும் என்றும் மறு நடுக்க தொடங்கும்  இதனை தொடர்ந்து அவை இறந்துவிடும். ஆதாவது நோய்த்தாக்கம் ஏற்பட்டு இரண்டு நாட்களுக்குள் பன்றிகள் இறந்து விடுகின்ற எனத் தெரிவித்தார்.

சுற்றுச் சூழல்  முதல் சுகாதார துறை எனத் அனைத்து மட்டங்களிலும் அனுமதி பெற்று பெருமளவு நிதியினை முதலீடு செய்து ஆரம்பித்த தொழில் வெற்றிகரமாக சென்றுக்கொண்டிருந்த நிலையில தற்போது இந்த வைரஸ் தாக்கம் எனது பண்ணையை முற்று முழுதாக அழித்துவிட்டது. மீளவும் இந்த தொழில் துறையை என்னால் ஆரம்பிக்க முடியுமா என்ற நிலைமையே  தற்போது காணப்படுகிறது.

அரசோ அல்லது உரிய திணைக்களங்களோ இதற்கான நட்டஈட்டை ஓரளவு தந்துதவினால் என்னால் மீண்டும் பன்றி வளர்ப்பு தொழிலை ஆரம்பிக்க முடியும் எனவும் பண்ணை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஊழலுக்கும் குற்றங்களுக்கும் இருந்துவந்த அரசியல் பாதுகாப்பை...

2025-04-28 11:21:47
news-image

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு நிராகரிப்பு!

2025-04-28 11:11:11
news-image

பெண்ணை கொலை செய்து சடலத்தை துண்டுகளாக...

2025-04-28 11:09:03
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிடி, எம்ஆர்ஐ...

2025-04-28 11:21:31
news-image

பாராளுமன்ற சபாநாயகர் இன்றுவரை தனது கல்விச்...

2025-04-28 10:35:58
news-image

கண்டியில் 600 மெற்றிக் தொன் திண்மக்கழிவுகள்...

2025-04-28 10:23:31
news-image

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலஞ்சம்,...

2025-04-28 10:05:04
news-image

ரயில் முன் பாய்ந்து ஒருவர் உயிர்மாய்ப்பு...

2025-04-28 09:52:57
news-image

மின்னல் தாக்கியதில் தந்தை, மகன் உள்ளிட்ட...

2025-04-28 09:10:26
news-image

ஒரு தொகை போதைப்பொருட்கள் இன்று அழிக்கப்படவுள்ளன...

2025-04-28 09:05:21
news-image

கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் ஆரோக்கியமான...

2025-04-28 08:52:58
news-image

இன்றைய வானிலை

2025-04-28 06:04:54