இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாலைதீவு அரசாங்கம் 25 ஆயிரம் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக அளித்துள்ளது.

 மாலைதீவு ஜனாதிபதியின் விசேட தூதுவர் டாக்டர் மொஹமட் அசிம் மற்றும் மாலைதீவின் வெளிவிவகார செயலாளர் ஆகியோர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரவிகருணாநாயக்கவை அவரது அமைச்சில் சந்தித்து நியுதவிக்கான காசோலையை கையளித்தனர்.

வெள்ளத்தால் இறந்தவர்கள் மற்றும் பதிக்கப்பட்ட மக்களுக்கு தனது கவலையை தெரிவித்த, மாலைதீவு ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவர், இரு நாடுகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்துவது தொடர்பிலும் பொருளாதாரம், சுகாதாரம், கல்வி மற்றும் மீன்பிடித்துறை தொடர்பிலும் அமைச்சர் ரவிகருணாநயக்கவுடன் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.