இன்றைய சூழலில் எம்மில் பலரும் தங்களுடைய நாளாந்த வாழ்வாதாரத்திற்காகவும், முன்னேற்றத்திற்காகவும் கடுமையாகவும், புத்திசாலித்தனமாகவும் உழைப்பதற்கு தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கான வாய்ப்புதான் மறுக்கப்படுகிறது. சிலருக்கு அனைத்து வசதிகளும் இருந்தாலும் விவரிக்க இயலாத அல்லது இனம் புரியாத தடைகளால் அவர்களின் எண்ணங்கள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை. வேறு சிலருக்கு கடன் சுமை , கல்வியில் தடை ,திருமண தடை, புத்திர பாக்கியத்தில் குறைபாடு, வேலை வாய்ப்பின்மை ,தொழிலில் தடை , வணிகத்தில் தடை என பல விடயங்களில் நேரடியான தடைகளையும் , மறைமுகமான தடைகளையும் எதிர்கொண்டு இருக்கக்கூடும். இந்த தருணத்தில் இத்தகைய தடைகளை அகற்றுவதற்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் எளிய மற்றும் வலிமையான சூட்சம குறிப்புகளை முன்மொழிந்திருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள் : மிளகு - பச்சை கற்பூரம்.
ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை வேளையில் 12 மிளகுனை எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் தேவையான அளவிற்கு பச்சை கற்பூரத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். இதனை எரிக்கும் போது மனதிற்குள், 'தெரிந்தும் தெரியாமலும் ,அறிந்தும் அறியாமலும், என் மீது இருக்கும் தடை அகல வேண்டும் ' என மனதிற்குள் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இத்தகைய எளிய வழிமுறையை மூன்று மாதம் தொடர்ந்தால் நான்காவது மாதத்திற்குள் உங்களுடைய தடைகள் தானாக விலகி, வாய்ப்புகள் உருவாகி, வெற்றிகளை பெற தொடங்குவீர்கள்.
எம்மில் சிலர் உடனடியாக நாங்கள் மூன்று மாதத்திற்கு மேலாக இத்தகைய எளிய குறிப்புகளை பாவித்தும் எங்களுக்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை என புலம்ப தொடங்குவார்கள். இவர்கள் நாளாந்தம் காலையில் மூன்று முறையும், மதிய வேளையில் ஆறு முறையும் , இரவு நேரத்தில் ஒன்பது முறையும் பாடசாலையில் பயிற்றுவிக்கும் மூன்றாம் வாய்ப்பாட்டை உச்சரித்துக் கொண்டே ஒரு நோட்டில் எழுத வேண்டும். இதனை தொடர்ச்சியாக 48 நாட்களும் தினசரி மூன்று வேளையும் உச்சரித்துக்கொண்டே எழுதி வந்தால் எண்களை இயல்பான அளவை விட கூடுதலாக உச்சரிப்பதாலும், எழுதுவதாலுப் ஏற்படும் அதிர்வலைகள்.. பிரபஞ்சத்திற்கு சென்று உங்களுடைய கோரிக்கை நிறைவேறும். அதன் பிறகு உங்களுடைய அனைத்து வித தடைகளும் அகன்று, நன்மை கிடைப்பதை அனுபவத்தில் உணரலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM