எம்முடைய உடலில் உள்ள மூட்டுகளில் நாம் அதிகம் பாவிக்கும் மூட்டு தோள்பட்டை மூட்டாகும். இதில் ஏதேனும் சிறிய அளவிலான அசௌகரியங்கள் ஏற்பட்டாலும் வலி உண்டாகும். இதனால் நாளாந்த வாழ்க்கைத் தரம் கடுமையாக பாதிக்கப்படும். இதிலிருந்து முழுமையான நிவாரணப் பெறுவதற்கு தற்போது பிளாஸ்மா சிகிச்சை முறை எனும் நவீன சிகிச்சை அறிமுகமாகி பலனளித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
தோள்பட்டையில் உள்ள மூட்டுகளில் வலி, தோள்பட்டையில் உள்ள எலும்பில் பாதிப்பு, தோள்பட்டையில் உள்ள தசை நாண்கள் வீக்கம், தோள்பட்டை இடப்பெயர்வு, தோள்பட்டையில் உள்ள தசைகள், தசை நாண்கள், தசை நார்கள் ஆகியவை விறைப்பாகி இயக்கத்தை கடினமாக்குவது, அசாதாரணமான தோள்பட்டை இயக்கம் , தோள்பட்டையில் ஏற்படும் காயங்கள் ,கழுத்து மற்றும் நுரையீரல் பகுதியில் ஏற்படும் பாதிப்பின் காரணமாக பக்க விளைவாக ஏற்படும் தோள்பட்டை வலி என பல்வேறு காரணங்களால் தோள்பட்டையில் வலி ஏற்படுகிறது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படாததால் பக்க விளைவை தோள்பட்டை வலி உண்டாகிறது. அதிலும் கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை அளவு காரணமாக தசைகள், தசை நார்கள் ஆகியவற்றின் இயல்பு தன்மையை மாற்றி இறுக வைத்து விடுகிறது. இதனால் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இல்லை என்றால் அவர்களுக்கு தோள்பட்டை வலி வரக்கூடும்.
முதுமையின் காரணமாகவும், தோள்பட்டையின் இயக்கத்திற்கு காரணமாக இருக்கும் உந்துவிசையில் ஏற்படும் மாற்றம் காரணமாகவும் தோள்பட்டை வலி ஏற்படக்கூடும். மேலும் வேறு சிலருக்கு இத்தகைய வலியின் காரணமாக கைகளை தோள்பட்டைக்கு மேல் கைகளை உயர்த்த இயலாது. தோள்பட்டையில் உள்ள தசைகளின் வலிமை குறைந்திருந்தாலும், தசைகள் பலவீனமடைந்து இருந்தாலும், தசைகள் சேதமடைந்து இருந்தாலும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். இதுபோன்ற வலி பாதிப்புகளை வைத்தியர்கள் எக்ஸ்ரே மற்றும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை மூலம் பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து அதற்கான சிகிச்சையை தீர்மானிப்பார்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு அவர்களுடைய இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கான சிகிச்சையை மேற்கொண்டு நிவாரணம் வழங்குவார்கள். மேலும் இவர்களுக்கு நாளாந்தம் கட்டாயம் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சியையும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துவார்கள்.
சிலருக்கு மட்டுமே பாதிப்பின் தன்மையை அவதானித்து பிளாஸ்மா சிகிச்சை எனும் நவீன சிகிச்சை முறையை மேற்கொண்டு முழுமையான நிவாரணத்தை வழங்குவார்கள். இதனுடன் நவீன மருத்துவ தொழில் நுட்பங்களால் கண்டறியப்பட்டிருக்கும் பிரத்தியேக மருந்தியல் சிகிச்சையையும் இயன் முறை சிகிச்சையையும் ஒருங்கே மேற்கொண்டால் பாதிப்பு குறையும். மேலும் நாளாந்தம் உடற்பயிற்சி, நடை பயிற்சி, உணவு முறை ஆகியவற்றில் வைத்தியர்களின் பரிந்துரையை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும்.
வைத்தியர் குமார்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM