தமிழ் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகரான கருணாகரன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' குற்றச்சாட்டு ' எனும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் விமல் விஷ்ணு தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ' குற்றச்சாட்டு ' எனும் திரைப்படத்தில் கருணாகரன், பிரானா , ஷிவானி ஹரிகுமார், ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நடிகர் பரத் சிறப்பு தோற்றத்தில் தோன்றுகிறார். ஆர் .கே. நிதின் சேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சுரேஷ் நந்தன் மற்றும் விஷால் சந்திரசேகர் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். உண்மை சம்பவத்தை தழுவி உணர்வுபூர்வமான படைப்பாக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை கா ஃபிலிம் கம்பனி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ராஜேஷ் மாதவன், த்யான் சங்கர், சஜினி ராஜேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கதாபாத்திரத்தின் தோற்றங்கள் இயல்பான மனிதர்களை பிரதிபலிப்பதால் பார்வையாளர்களிடம் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM